தலைமை நீதிபதி பொறுப்பிலிருந்து ஷிராணி ஒரு நாளில் ஓய்வு
இலங்கையில் புதனன்று மீண்டும் பதவி அமர்த்தப்பட்ட தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்க வியாழனன்று பொறுப்பிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்...

ஷிராணியை நாடாளுமன்றம் குற்றஞ்சாட்டி பதவி நீக்கியது தவறு என தீர்மானிக்கப்பட்டதன் பின்னர் அவர் மீண்டும் பதவி அகற்றப்பட்டிருந்தார்.

தான் ஒய்வு பெற்ற பின்பு வெற்றிடமாகும், இலங்கையின் 44ஆவது தலைமை நிதிபதி பதவிக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக செயற்படும் கே.ஸ்ரீபவன் நியமிக்கப்பட்டால் அது தொடர்பாக தான் மகிழ்ச்சியடைவதாகவும் கூறினார்.
நீதித் துறையில் தான பதினாறு வருட காலம் சேவையாற்றியுள்ளதாக கூறிய ஷிராணி பண்டாரநாயக்க, அந்தக் காலப் பகுதியில் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்ட தான் முயற்சிகளை மேற்கொண்டதாக தெரிவித்தார்.
ஆயினும் அடிப்படையற்ற முறையில் சமர்ப்பிக்கப்பட்ட கண்டன தீர்மானமொன்று காரணமாக தனது சேவை காலத்தில் 746 நாட்கள் பறிக்கப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டினார்.
அந்த காலப் பகுதிக்குள் தனது குடும்பத்தினர் மற்றும் தனக்கு ஆதரவளிக்க் முன்வந்தோர் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்ததாக கூறிய நிதிபதி பண்டாரநாயக்க அச்சுறுத்தல்கள் மத்தியில் தன்னை ஆதரித்த பொது மக்கள் வழக்கறிஞர்கள் மற்றும் கீழ் நீதிமன்றங்களில் செய ற்படும் நிதிபதிகளின் துணிச்சலை தான் வரவேற்பதாகவும் கூறினார்.
ஆயினும் தலைமை நிதிபதியாக ஷிராணி பண்டாரநாயக்க நியமிக்கப்பட்ட முறையை தனக்கு ஏற்றுக்கொள்ள முடியாதென்று மூத்த வழக்கறிஞர் ஸ்ரீநாத் பெரேராகூறினார் .
தலைமை நிதிபதி ஷிராணி பண்டாரநாயக்க நிக்கப்பட்ட நாடாளுமன்ற தீர்மானம் முறையாக நிறைவேற்றப்படாத காரணத்தினால், அவர் மிண்டும் பதவியில் அமர்த்தப்பட்டு மொஹான் பிரிஸ் பதவி நீக்கப்பட்டுள்ளார்.
இந்த முறையை தனக்கு ஏற்றுக் கொள்ள முடியாதென்று கூறிய ஸ்ரீநாத் பெரேரா, இவ்வாறு நிதிபதிகள் நிக்கப் பட்டால் எதிர்காலத்தில் ஆட்சி அமைக்கும் அரசாங்கங்களும் தான் விரும்பியவாறு நீதிபதிகளை நீக்குவதட்கு நடவடிக்கைகளை எடுப்பதற்கு வாய்ப்புக்கள் ஏற்படலாமென்றும் எச்சரித்தார்.
ஆயினும் மொஹான் பிரிஸ் பதவி நீக்கப்பட்டாலும் கூட அவர் வழங்கிய தீர்ப்புக்கள் செல்லுப்படியற்றவை என்று கருதப்பட மாட்டதென்று வழக்கறிஞர் எம்.ஏ.சுமந்திரன் கூறினார்.
இந்த வைபவத்தில் உச்ச நீதிமன்ற, மேன் முறையிட்டு நீதிமன்ற மற்றும் மஜிஸ்ட்ரேட் நீதிமன்ற நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் கலந்துகொண்டனர்.