பதவி விலகுகிறார் அமைச்சர் பைஸர் முஸ்தபா! -ஸ்ரீலங்கன் நிறுவனத் தலைவர் நியமனத்தில்அதிருப்தி
சிவில் விமான சேவைகள் ராஜாங்க அமைச்சர் பைசர் முஸ்தபா நாளை தமது பதவியை ராஜினாமா செய்யவுள்ளார். ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் தலைவராக அஜித் டயஸ...
http://kandyskynews.blogspot.com/2015/01/blog-post_582.html
சிவில் விமான சேவைகள் ராஜாங்க அமைச்சர் பைசர் முஸ்தபா நாளை தமது பதவியை ராஜினாமா செய்யவுள்ளார். ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் தலைவராக அஜித் டயஸ் நியமிக்கப்பட்டமைக்கு பைசர் முஸ்தபா கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். இதையடுத்து தனது பதவியை நாளை ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதமொன்றையும் அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது பைசர் முஸ்தபா இறுதி நேரத்தில் தனது பிரதி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து, பொது வேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Sri Lanka Rupee Exchange Rate