இந்தியாவுக்கு எதிராக சீனாவை தூண்டியவர் ராஜபக்சே: விக்ரமசிங்கே
கொழும்பு - இந்தியாவுக்கு எதிராக சீனாவை துண்டியவர் முன்னாள் அதிபர் ராஜபக்சே என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே குற்றம் சாட்டியுள்ளார். இ...

இலங்கையில் நடந்த தேர்தலில் அதிபராக இருந்த ராஜபக்சே படுதோல்வியை தழுவினார். இதையடுத்து புதிய அதிபராக மைத்ரிபால சிறீசேனா பதவியேற்றுள்ளார். பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றுள்ளார். கொழும்பில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு ரணில் விக்ரமசிங்கே பேட்டியளித்தார். அப்போது கூறிய அவர், ராஜபக்சேவுடன் எந்த ரகசிய உடன்பாடும் தமதுஅரசு வைத்துக் கொள்ளவில்லை என்று கூறினார். மேலும் போர்க்குற்றம் தொடர்பான ஐ.நா. விசாரணைக்கு தமது அரசு ஒத்துழைக்கும் என்று கூறிய விக்ரமசிங்கே, இந்தியாவுக்கு எதிராக சீனாவை தூண்டியவர் ராஜபக்சே. அவரது அரசு சீனாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களை தமது அரசு மறு பரிசீலனை செய்யும் என்று கூறிய விக்ரமசிங்கே, தமிழர்களுக்கு சுயாட்சி உரிமை அளிக்கப்படும் என்றும் உறுதியளித்தார். இதனிடையே ராஜபக்சே தனது கட்சி பதவியையும் இழந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.