நாம் உண்மையை சொல்ல அஞ்சமாட்டோம் -பொதுபல சேனா
இலங்கைக்கு போதைப்பொருள் கொண்டு வரும் நபர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட வேண்டுமென பொதுபல சேனா அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. எவ்வளவு அ...

http://kandyskynews.blogspot.com/2015/01/blog-post_407.html

எவ்வளவு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலும், எவ்வளவு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டாலும் பொதுபல சேனா சொல்ல வேண்டிய கசப்பான உண்மையை சொல்ல அஞ்சாது என அமைப்பின் நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே தெரிவித்துள்ளார்.
பொதுபல சேனா போதைப்பொருள் மற்றும் ஊழல் மோசடிகள் குறித்து பேசியது தேர்தல்களை இலக்கு வைத்து அல்ல. 2013ம் ஆண்டு போதைப்பொருள் நகரமான கொலன்னாவையில் நாம் மாநாடு ஒன்றை நடத்தியிருந்தோம்.
போதைப்பொருளினால் ஏற்படக்கூடிய அழிவுகள் குறித்து பாடசாலை மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பலருக்கும் தெளிவுபடுத்தல்கள் மேற்கொள்ளப்பட உள்ளது.
பௌத்த விஹாரைகளை மையமாகக் கொண்டு இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
ஜனாதிபதி தேர்தலில் உறுதியளிக்கப்பட்டது போன்று போதைப்பொருள் கடத்தல்கள் விநியோகத்தை கட்டுப்படுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் பொதுபல சேனா இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.