தேர்தலில் ஜில்மாட், கள்ள ஓட்டு போடுவார்கள் என்று ஆருடம் கூறுபவர்களுக்கு அரச தகவல் திணைக்களத்தில் வேலை செய்பவரின் அறிவுரை.
” மஹிந்த தான் எப்படியும் வெற்றி பெறுவார் ” ”கள்ள வோட் போட்டாவது வென்றுவிடுவார்கள் ” ” எல்லாம் அரசாங்கத்தின் கையில்தான் இருக்கிறது அதனால் ஒன்...
http://kandyskynews.blogspot.com/2015/01/blog-post_37.html
” மஹிந்த தான் எப்படியும் வெற்றி பெறுவார் ”
”கள்ள வோட் போட்டாவது வென்றுவிடுவார்கள் ”
” எல்லாம் அரசாங்கத்தின் கையில்தான் இருக்கிறது
அதனால் ஒன்றும் செய்ய முடியாது ”
இப்படி ஆரூடம் சொல்பவர்களை நாம் இந்த தேர்தல்
காலத்தில் நாம் தினம் தினம் சந்திக்கின்றோம்.
முதலிம் ஒரு முஸ்லிம் இப்படி ஷிர்க்கான வார்த்தைகளை
ஒரு போதும் பயன்படுத்தக்கூடாது. முதலில் அல்லாஹ்
மீதான நம்பிக்கையை முதன்மைப்படுத்திப் பேசப்பழக்கப்
படுத்திக் கொள்ளவேண்டும்.அதோடு மக்கள் நினைத்துக்
கொண்டு இருப்பதுபோல் தேர்தலில் களவு செய்யமுடியாது.
நான் கடந்த ஐந்து வருடங்களாக அரசாங்க தகவல்
திணைக்களத்தில் வேலை செய்தேன்.அந்தக் காலப்பகுதியில்
நடைபெற்ற எல்லாத் தேர்தல்களிலும் தேர்தல் கடமைகளில்
ஈடுபட்டிருக்கிறேன்.எனது அனுபவத்தில் மக்கள் நினைப்பது
போன்று தேர்தல் முடிவுகளை மாற்றமுடியாது.இடையில்
பெட்டியை மாற்றுதல்,வாக்கு எண்ணும்போது ஒரு
வேட்பாளருக்கு சாதகமாக நடந்துகொள்ளுதல், இவை
எதுவே சாத்தியமற்றது.இவை அனைத்துமே தேர்தல்களில்
தோற்றவர்கள் சொல்லும் போலிக் காரணங்களாகும்.
தேர்தல் குறித்து மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையின்மையை தோற்றுவித்து, மக்களை வாக்களிக்கச் செல்லாமல் செய்வதற்கு சம்பந்தப்பட்டவர்களால்மேற்கொள்ளப்படும் ஒரு உத்தியே இந்த தேர்தலில் களவு நடக்கும் என்பது.
தேர்தலில் ஜில்மாட் செய்து வெற்றி பெற முடியுமென்றால்
மஹிந்த இவ்வளவு பயப்படவோ,இவ்வளவு செலவுசெய்யவோ மாட்டார்.கடைசி நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்திருப்பார்.
ஆனால் தேர்தல் காலத்தில் வன்முறைகளைத் தோற்று
வித்தல்,வாக்களிப்பு நிலையங்களுக்கு மக்களை செல்ல
விடாமல் தடுத்தல்,வெளிநாட்டில் இருப்பவர்கள்,இறந்த
வர்கள்,முதியவர்கள் போன்றவர்களின் வாக்குகளைப்
போடுதல்,நாம் யாருக்கு போட்டாலும் ஆலும் தரப்பு
வென்றுவிடும் என்ற கருத்தை பரவலாக்குதல்,மக்களுக்கு
வாக்களிப்பதன் மீதுள்ள ஆர்வத்தை குறைத்தல் போன்ற
விடயங்களை அதிகாரமுள்ளவர்களினால் செய்யமுடியும்
இப்படியான விடயங்களும் தேர்தல் முடிவில் பாரிய
தாக்கத்தை ஏற்படுத்தும்.
எனவே ஆருடம் சொல்லிக்
கொண்டு இருக்காமல் எட்டாம் திகதி காலையிலேயே
சென்று எமது வாக்குகளை சரியாகப் பதிவு செய்வது
எமது ஜனநாயக உரிமையை நிலை நாட்டுவோம்.