மஹிந்தவுக்கு ஆதரவு வழங்கிய முஸ்லிம் கங்கிரஸ் மற்றும் மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு ஆப்பு !…..
இலங்கையின் பிரதான இரு முஸ்லிம் கட்சிகளான முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தற்போதைய ஜனாதிபதி மைத்ரிக்கு அதரவு வழங்க...
http://kandyskynews.blogspot.com/2015/01/blog-post_270.html
இலங்கையின் பிரதான இரு முஸ்லிம் கட்சிகளான முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தற்போதைய ஜனாதிபதி மைத்ரிக்கு அதரவு வழங்க தீர்மானித்த போது முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மக்கள் காங்கிரசின் சில உறுப்பினர்கள் அப்போதைய ஜனாதிபதி மஹிந்தவுக்கு அதரவு வழங்குவதாக அறிவித்து அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்தனர். அதுமட்டுமில்லாமல் மைத்ரிக்கு எதிராகவும் கட்சி தலைமைக்கு எதிராக கடும் விமர்சனக்களையும் முன்வைத்திருந்தனர்.
முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவுத் மஹிந்த ராஜபக்ஷ வெற்றிபெற வாழ்த்து தெரிவித்ததுடன் தேர்தல் காலங்களில் மைத்ரிக்கு பிரசாரம் செய்வதில் இருந்து தவிர்ந்து இருந்தாகவும் விமர்சனங்களும் குற்றச்சாட்டுக்களும் எழுந்தன.
இவர் தவிர சில ம.கா மற்றும் மு.கா உறுப்பினர்கள் சிலர் தமது பைல்களை பாதுகாத்துக்கொள்ளவும் மகிந்தவிடம் இருந்து தேர்தல் செலவுக்கு என ஒரு தொகை பணத்தை சுருட்டிக்கொள்ளவும் அங்கு தங்கிக்கொண்டனர் எனவும் கடுமையான விமர்சனங்கள் எழுந்திருந்தன.
இந்த நிலையில் சற்றுமுன் மடவளை நியூஸ் முகா வின் பொது செயலாளர் ஹசன் அலி அவர்களை தொடர்புகொண்டு தலைமையின் முடிவை மீறி நடந்தவர்கள் தொடர்பாக கேட்டபோது கட்சி தலைமை என்பது கட்சி, கட்சி எடுத்த முடிவை மீறி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க வெளிப்படையாக பிரசாரம் செய்யாதவர்களை கட்சி உறுப்புரிமையில் இருந்து நீக்குவதற்கான கடிதம் அனுப்பப்பட்டுள்ளது மறைமுகமாக கட்சியின் முடிவுக்கு எதிராக செயற்பட்டவர்களுக்கு எதிராக முறைப்பாடுகள் கிடக்கும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
அதனை தொடர்ந்து நாம் மக்கள் காங்கிரஸ் பொது செயலாளர் வை எல் எஸ் ஹமீத் அவர்களை தொடர்ப்புகொண்டு அவர்களின் கட்சி நிலைப்பாடு தொடர்பாக கேட்டபோது தமது கட்சி முடிவை மீறி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அதரவு வழங்கியவர்கள் கட்சியில் இருந்து பாரபட்சமின்றி நீக்கப்படுவர் என திட்டவட்டமாக குறிப்பிட்டார்.


Sri Lanka Rupee Exchange Rate