மகிந்த அரசினால் 1200 பில்லியன் ரூபா மோசடி! - அதிர்ச்சித் தகவல்.
மகிந்த ராஜபக்ச அரசாங்கம் 1200 பில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்துள்ளதாக புதிய அரசாங்கம் குற்றம்சுமத்தியுள்ளது.கடந்த நான்கு ஆண்டு காலத்தில் அர...

லஞ்ச ஊழல் தவிர்ப்பு ஆணைக்குழுவினை சரியான முறையில் செயற்படுத்தி குற்றம் இழைத்தவர்களுக்கு தண்டனை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்து தற்போதைய அரசாங்கத்திலும் பதவிகள் வகிக்கும் அமைச்சர்கள் அதிகாரிகள் சிலரும் உழல் மோசடிகளுடன் தொடர்புபட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கடந்த அரசாங்கம் நான்கு ஆண்டுகளில் 1200 பில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக ஊழல்களுக்கு எதிரான குரல் அமைப்பின் அழைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.பெருந்தெருக்கள், கட்டிட நிர்மானம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பாரியளவில் மோசடிகள் செய்யப்பட்டுள்ளன. ஊழல் மோசடியாளர்கள் எவ்வாறு பணத்தை மோசடி செய்துள்ளனர், எவ்வாறான மோசடிகள் இடம்பெற்றுள்ளன என்பது குறித்து விரிவான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.