நபிகளாரை கேலிசெய்த பிரஞ்சு பத்திரிகைக்கு எதிராக உலகெங்கும் போராட்டம் – 06 பேர் மரணம்
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் சர்ச்சைக்குரிய காட்டூன் பிரசுரித்த ‘சார்லி ஹெப்டோ’ என்ற பிரெஞ்சு பத்திரிகை அலுவலகம் மீது ஆயுததாரிகள் தாக்குதல் ந...

இதற்கு பதில் அளித்த பிரான்ஸ் அதிபர் ஹோலண்டே ‘‘கருத்து சுதந்திரத்தை வெளிப்படுத்த அனைவருக்கும் உரிமை உண்டு’’ என தெரிவித்தார். அதை தொடர்ந்து பாகிஸ்தான், ரஷியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் போராட்டம் நடத்தப்பட்டது.
அதை தொடர்ந்து ஆப்பிரிக்க நாடான நைஜரில் கலவரம் வெடித்தது. தலைநகர் நியாமியில் 1000–க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திரண்டனர். கையில் இரும்பு தடிகள், கோடாரிகள் மற்றும் சங்கிலிகளுடன் பேரணியாக வந்தனர்.
கண்ணீர் புகை குண்டுகளை வீசி போலீசார் அவர்களை கட்டுப்படுத்த முயன்றனர். இதனால் கலவரம் மூண்டது. அப்போது, போலீசார் மீதும் வாகனங்கள் மீதும் கல்வீசப்பட்டது.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர்களின் வர்த்தக நிறுவனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. ஓட்டல்கள், மதுபார்களும் சூறையாடப்பட்டன. நியாமி நகரில் 7 கிறிஸ்தவ தேவாலயங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
மற்றொரு நகரமான ஷிண்டரில் நேற்றும் கலவரம் நடந்தது. கடைகள், பிரெஞ்சு கலாசார மையம் போன்றவையும் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைக்கப்பட்டது.
கடந்த 2 நாட்களாக நடந்த கலவரங்களில் 6 பேர் பலியாகினர். மேலும் பல உடல்கள்கள் மறைவிடங்களில் கிடக்கின்றன. அவற்றை தேடும் பணி நடக்கிறது. இதனால் சாவு எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.