மைத்திரிக்கு ஆதரவளிப்பது ஏன்? ரிஷாத் விளக்கம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியூதீன், மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிப்பதாக நேற்று   அறிவித்திருந்தார் . அ...

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியூதீன், மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிப்பதாக நேற்று   அறிவித்திருந்தார் . அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அலியும் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக இதன்போது இணைந்து கொண்டமை குறிப்பிடக்கத்தது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  அரசாங்கத்துக்கு வழங்கிவந்த ஆதரவை விலக்கி ஜனாதிபதி தேர்தலில் மைதிரிக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளது இது தொடர்பில் ரிஷாட் பதியூதீன் கருத்து தெரிவிக்கும்போது ,

ஒரு குடும்பமாக வாழ வேண்டிய இந்த சிறிய நாட்டில்,பிரிவினையை ஏற்படுத்தி, பிரச்சினைகளை உருவாக்கியமையை நீங்கள் அறிவீர்கள். அந்த சந்தர்ப்பத்தில் அமைச்சரவை அமைச்சர் என்ற விதத்தில், ஜனாதிபதிக்கும், குறிப்பிட்ட பாதுகாப்பு பிரிவினரும், அனைத்து சந்தர்ப்பங்களிலும் நாம் தெளிவுப்படுத்தியிருந்தோம். அதனை நிறுத்துமாறும் நாம் கோரிக்கை விடுத்தோம். இவ்வாறான தவறுகளை இழைக்கின்ற நபர்களுக்கு தண்டனையை வழங்குமாறும் நாம் கோரிக்கை விடுத்தோம். எனினும்இ எந்தவொரு நபருக்கும் தண்டனை வழங்கப்படவில்லை. நிறுத்தப்படவும் இல்லை. அது தொடர்ச்சியாக அதிகரித்தது. மக்கள் அச்சப்பட ஆரம்பித்தனர். அளுத்கம சம்பவத்தை நீங்கள் அறிவீர்கள்.

அது திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்ட ஒரு சம்பவமாகும். இவ்வாறான சம்பவமொன்று இடம்பெறுகின்றது, அதனை நிறுத்துமாறும் நாம் கோரினோம். அதற்கு அனைத்து இடங்களிலும் அனுமதி வழங்கப்பட்டது. உண்மையில் பெஷில் ராஜபக்ஸவிற்கு நாம் நன்றி தெரிவிக்க வேண்டும். இந்த பிரச்சினை பெரிதுபடாத வகையில் பார்த்துக்கொண்டார். இரவு முழுவதும் அவரது முழுமையான ஒத்துழைப்பை வழங்கி, அதனை நிறுத்தினார். இதனை நிறுத்துமாறு நாம் கோரிக்கை விடுத்த போதிலும், அது நிறுத்தப்படவில்லை.என அவர் தெரிவித்துள்ளார்

http://lankamuslim.org/

Related

இலங்கை 5483280015330503694

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item