அமைச்சர் ரிஷாத்: ஒரு பார்வையாளனின் பார்வையில்……..நேரடி ரிப்போர்ட்

தருவது-வழிகாட்டி:   புத்தளம் தில்லையடி அம்மார் மண்டபத்தில் இடம் பெற்றது என்ன ? கொட்டும் மழை, வீசும் குளிர் காற்று புத்தளம் தில்லையடி அம்மார்...

தருவது-வழிகாட்டி:  புத்தளம் தில்லையடி அம்மார் மண்டபத்தில் இடம் பெற்றது என்ன ? கொட்டும் மழை, வீசும் குளிர் காற்று புத்தளம் தில்லையடி அம்மார் மண்டபத்துக்குள் நுழைகின்றேன். அம்மண்டபத்தின் 3 வது மாடி கடும் சூடாக இருக்கிறது.அங்கு உலமாக்கள், புத்திஜீவிகள்,போராளிகள், துறை சார்ந்தவர்கள்,முகாம்களின் தலைவர்கள் என பல தரப்பட்ட மக்கள் வெள்ளம்,மண்டபம் கொள்ளாத அளவுக்கு நிரம்பி வழிகிறது.மாலை 5.30 இருக்கும்.மண்டபத்துக்குள் இருப்பவர்களின் கண்கள் அகல விரிந்து எதிர்பார்ப்பு ஏக்கம் தெரிகிறது.அப்போது ஸலாத்துடன் நுழைகின்றார் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன்,அவரது ஸலாத்துக்கு ஒரு மித்த குரலில் பதிலும் அனல் தெரிக்கிறது.

தற்போது இலங்கையில் பேசப்பட்டுவரும் அரசியல் தளத்தில் முஸ்லிம்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றவர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவர் றிசாத் பதியுதீன் என்பதை நாம் எல்லோரும் அறிவோம். மண்டபத்தில் தயார்படுத்தப்பட்டிருந்த மேடையில் அமைதியாக அமர்கின்றார் அமைச்சர் றிசாத்,நிகழ்ச்சிகள் கிராத்துடன் ஆரம்பமாகிறது. அல்லாஹ்வின் திருமறையின் வசனங்கள் அனைவரது உள்ளங்களிலும் சாந்தியையும், சமாதானத்தினையும்,மலரச் செய்கி ன்றது. கூட்டத்தை நெறிப்படுத்தியவர் இன்று இந்த கூட்டம் ஏன் கூட்டப்பட்டது என்ற விளக்கத்தை சபையில் முன் வைத்தார்.அரசியல் தீர்மானம் எடுக்கப்படுகின்ற போது தொண்டர்களின் கருத்துக்கள் எவ்வளவு முக்கியம் என்பதை அவர் வலியுறுத்த தவறவில்லை.

அதன் பிற்பாடு அரங்கில் அமர்ந்திருந்த பொதுமக்கள் தமது கருத்துக்களை முன் வைக்கலாம் என்ற அறிவிப்பை அறிவிப்பாளர் தெரிவித்ததும்,முதலில் ஆசிரியர் ஒருவர் தமது கருத்துக்களை முன் வைத்தார்.அவரது ஆரம்ப கருத்து வடக்கில் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல,ஏனைய சமூகத்திற்கும் அமைச்சர் றிசாத் பதியுதீன் ஆற்றியுள்ள பணிகள் முக்கியமானது,இந்த பணிகள் தொடர தொடர்ந்தும் அரசாங்கத்துடன் அமைச்சர் இருக்க வேண்டும் என்றார்,அதன் பின்னர் மற்றுமொரு அரச அதிகாரி தமது கருத்தை முன் வைத்தார்.கடந்த 30 வருட காலமாக தாங்கள் அனுபவித்த துன்பங்களையும்,துயரங்களையும் இங்கு சுட்டிக்காட்டி தற்போது எமது முஸ்லிம்கள் சற்று தலைதுாக்க ஆரம்பித்துள்ளனர்.இந்த நிலையினை வலுப்படுத்தி எம்மால் இழந்தவற்றில் ஓரளவேனும் பெற இந்த அரசில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று உரத்த குரலில் கூறினார்.அதே போன்று வருகைத்தந்தவர்களில் பிரதேச ரீதியாகவும்,உலமாக்களும்,புத்தி ஜீவிகளும் தமது கருத்தில் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும்,அமைச்சர் றிசாதின் கரத்தை பலப்படுத்த தாங்கள் முன் வந்துள்ளதாகவும் இங்கு கூறினர்.நிகழ்ச்சி தொகுப்பாளர் தமக்கு வழங்கப்பட்ட ஒரு சில நிமிடங்களுள் தமது ஆழமான கருத்துக்களை முன் வைத்த போது மண்டபம் அமைதி கொண்டது.

பலதரப்பட்ட கருத்துக்களால் சங்கமமான அம்மார் மண்டபம்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவர்,அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களின்  பதிலுரைக்கும்,தீர்மானத்துக்குமாக தயாரானது.அமைதியான நிதானமான முறையில் அமர்ந்திருந்த தலைவர் றிசாத் பதியுதீன் ஒலிவாங்கிக்கு அருகில் வந்த போது அவரது குரலில் கரகரப்பு இருந்தது இறைவசனங்களோடு தமது உரையினை ஆரம்பித்த அமைச்சர் தற்போது ஏற்பட்டுள்ள நிலவரம்,எடுக்க வேண்டிய தீர்மானங்களின் இறுதி வடிவம்,கடந்த காலங்களில் தான் ஆற்றிய பணிகளை மக்களுக்கு விளக்கப்படுத்தினார்.தனது அகதி முகாம் வாழ்க்கைக்கு பின்னர் அல்லாஹ்வின் அருளால் வடபுல மக்களின் அயராத ஒத்துழைப்பினால் அடைந்த இந்த பதவிகள் ஊடக ஆற்றக் கிடைத்த பணிகள் தொ்டர்பிலும் ஒரு மீள் பரிசீலனை செய்தார்.அமைச்சரின் ஒவ்வொரு வார்த்தைகளின் வெளிப்பாட்டினை மண்டபத்தில் இருந்தவர்கள் மிகவும் கூர்ந்து கேட்டுக் கொண்டிருந்தததையும் அவ்வப்போது எனது பார்வை கண்டுகொண்டது.

வடக்கில் வாழும் முஸ்லிம்களுக்கு மட்டுமல்லாது நாட்டில் ஏனைய மாவட்டங்களில் நலிவுற்று வாழும் முஸ்லிம்களின்  விமோசனம்,தேவைகள் தொடர்பில் அதீத அக்கறை கொண்ட ஒருவராக தலைவர் றிசாத் பதியுதீன் தமது அரசியல் பதவி காலத்தில் செயற்பட்டுவந்துள்ளார் .எங்கு மக்களுக்கு பாதிப்பு நடக்கின்றதோ,அதற்காக நேரம் காலம் பார்க்காது உடனே அவ்விடத்தில் ஆஜராகி இம்மக்களின் பாதுகாப்பு தொடர்பில் உரிய நடவடிக்கையினை எடுத்துள்ளதையும் இந்த நேரத்தில் நினைவுபடுத்துவது பொருத்தமாகும்.

இன்னும் யாருக்கு ஆதரவு அளிப்பது என்ற தீர்மானம் எடுக்கப்படாத நிலையில் உங்களோடு பேசிக் கொண்டிருக்கின்றேன்.நீ்ஙகள் வற்புறுத்துவது போன்று அரசுடன் இணைந்திருப்பது வன்னி மக்களுக்கு மட்டும் நலனாக இருக்கும் என்பதற்காக உடனடியாக எந்த தீர்மானத்தையும் என்னால் எடுத்துவிட முடியாது,வடக்கிற்கு வெளியே வாழும் ஒட்டுமொத்த முஸ்லிம்களின் எதிர்காலம் தொடர்பிலும் நாம் ஆழ்ந்து நோக்க வேண்டியுள்ளது.இந்த நாட்டில் எமது முஸ்லிம்களுக்கு இனியும் ஆபத்துக்கள் வரக் கூடாது என்ற விடயத்தில் நானும்,எமது கட்சியும் உறுதியான நிலைப்பாட்டினை கொண்டுள்ளோம்..எமது தீர்மானத்தால் வடக்கு மக்கள் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் இங்கு மேலோங்கி காணப்படுகின்றது.எந்த முடிவாக இருந்தாலும் அதனை நாம் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்,சமூகத்தின் பாதுகாப்பு தொடர்பில் மிகவும் ஆழமாக சிந்திக்க வேண்டியுள்ளது.

எனது இந்த அமைச்சுப்பதவியினை துறந்து நான் மக்களோடு மக்களாக  நிற்பேனெனில்அது மக்களுக்கு நன்மையாக அமைய வேண்டும் என்பதே எனது ஆசை,நான் இன்று இந்த பதவியில் இருக்கும் வரை என்னால் வடக்கு மக்களுக்கும்,அதற்கு வெளியில் வாழும் முஸ்லிம் மக்களுக்கும் முடியுமான பணியினை ஆற்றியுள்ளேன்.இந்த பதவி செல்லும் போது எனக்கு வழங்கப்ட்ட பாதுகாப்பு அகற்றப்படும்,அதே போல் நான் எனது உத்தியோக வாசஸ்தலத்திலிருந்து வெளியேற்றப்படுவேன்,என்னால் இந்த சமூகத்திற்கு பணியாற்றவென நியமிக்கப்பட்ட அதிகாரிகள் தமது பணிகளை துறப்பார்கள்,என்று கூறிய அமைச்சர் இந்த பதவிகளை தருவது அல்லாஹ் ஒருவனே.அவனது நாட்டம் எப்படி இருக்கின்றதோ அதுவே நடக்கும் என்பதை உறுதியாக விசுவாசம் கொண்ட முஸ்லிம் என்பதையும் உங்கள் முன் கூறிக்கொள்ளவிரும்புகின்றேன்..இந்த சமூகத்திற்காக பதவிகளை துறந்தாலும்,எனது உயிர் இருக்கும் வரை இன்ஷா அல்லாஹ் என்னால் ஆன அனைத்து பணிகளையும் மக்களுக்காக செய்வேன் என்று கூறிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் கண்கலங்கிய காட்சி எல்லோரது மனங்களையும் கவலைக்குள்ளாகியது.அதற்கு மேல் எந்த உரையினையும் ஆற்றாத அமைச்சர் ஸலாத்துடன் மேடையில் இருந்த தமது ஆசனத்தில் அமர்ந்தார்.அமைச்சர் ஒருவர் அதுவும் இந்த முஸ்லிம் சமூகத்துக்கு அளப்பறிய சேவைகளை செய்தும் அவரின் இந்த அமைதியான பேச்சினையடுத்து மண்டபத்துள் அமர்ந்திருந்த மக்கள் எழுந்து சென்று அமைச்சருக்கு முஸாபஹா செய்ததுடன்,அமைச்சரின் ஆரோக்கியத்துக்கும்,துணிகரமான தீர்மானங்களுக்கும்,பாதுகாப்புக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றோம் என்று கூறி தாங்களும் கண்ணீர் விட்டு அமைச்சரை ஆறுதல் படுத்திய நிகழ்வு என்னையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.கண்களை கசக்கிக் கொண்டு இரவு 8.00 மணியிருக்கும் நானும் அம்மார் மண்டபத்தினை வெளியேறினேன்.அங்கு அமைச்சருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து மக்கள் வழியனுப்பி வைத்ததையும் காணமுடிந்த

http://lankamuslim.org/

Related

இலங்கை 2358053697538966600

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item