ஒரு கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது
சட்டவிரோதமான முறையில் ஒரு கோடியே 15 இலட்சத்து ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்களை சிங்கப்பூருக்கு கொண்டுச் செல்ல முயன்ற நபர் ஒருவர் இ...
https://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_2.html
சட்டவிரோதமான முறையில் ஒரு கோடியே 15 இலட்சத்து ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்களை சிங்கப்பூருக்கு கொண்டுச் செல்ல முயன்ற நபர் ஒருவர் இன்று அதிகாலை 1.20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிங்கப்பூர் விமான சேவைக்கு சொந்தமான எஸ்.கியூ. 469 என்ற விமானத்தில் சிங்கப்பூருக்கு செல்லவிருந்த கொழும்பு ராஜகிரிய பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 85 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

