அமெரிக்கா செல்ல முடியாத நிலையில் கோத்தபாய!

அமெரிக்க குடியுரிமையைக் கொண்டிருந்தாலும், அங்கு செல்ல முடியாத நிலைமையை எதிர்நோக்கியுள்ளார் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச. ...

அமெரிக்க குடியுரிமையைக் கொண்டிருந்தாலும், அங்கு செல்ல முடியாத நிலைமையை எதிர்நோக்கியுள்ளார் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச. போரில் இடம்பெற்ற போர் குற்றங்களுக்கு பொறுப்புக்கூற வேண்டிய முக்கிய நபரான கோத்தபாய ராஜபக்ச சர்வதேசத்திற்கு மத்தியில் குற்றவாளியாக இருப்பதே அவர் அமெரிக்கா செல்ல முடியாமைக்கான காரணம் என கூறப்படுகிறது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தனது சகோதரர் தோல்வியடைந்ததை அடுத்து கோத்தபாயவின் மற்றுமொரு சகோதரரான பசில் ராஜபக்ச அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார். ஆனால், தாம் கைது செய்யப்பட்டால் பாரதூரமான நிலைமையை எதிர்நோக்க வேண்டியேற்படும் என்ற அச்சம் காரணமாக கோத்தபாய அமெரிக்காவுக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது.

மகிந்தவின் தோல்விக்கு பின்னர் தற்போதைய அரசாங்கம் கோத்தபாய மீது பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ள போதிலும் அவரை கைது செய்ய தவறியுள்ளதாக குற்றம்சுமத்தப்படுகிறது.

Related

இலங்கை 4993177364940650071

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item