முஸ்லிம்களின் ஆதரவை மஹிந்தவாலும் கோட்டாவாலும் இழந்தோம்
கடந்த ஜனாதிபதி தேர்தலில், முஸ்லிம் மக்களின் வாக்குகளின் எண்ணிக்கை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு கிடைக்காமல் போனமைக்கு முன்னாள் ஜனாதிபதி மஹி...
https://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_28.html
கடந்த ஜனாதிபதி தேர்தலில், முஸ்லிம் மக்களின் வாக்குகளின் எண்ணிக்கை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு கிடைக்காமல் போனமைக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் கோட்டபாய ராஜபக்ஸ ஆகியோரே காரணம் என அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க குற்றம் சாட்டியுள்ளார் .
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் கடந்த தேர்தலில் 50 சதவீதம் கிடைத்தது. முஸ்லிம் வாக்குகள் 4 சதவீதமே கிடைத்தது, இவ்வாறு எப்பொழுதும் குறைவடைந்தது இல்லை. இதற்கு காரணம் என்ன மகிந்தவும், கோட்டாவுமே என அவர் குறிப்பிட்டுள்ளார்.

