ஆஸ்திரேலியர்கள் ஈராக்கில் உள்ள மொசூல் நகருக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை தங்கள் ஆதிக்கத்தில் வைத்து உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்ந்து நாசவேலைகளில் ஈடுபட்டு வருகிறார்க...
https://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_49.html

இதுகுறித்து அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி ஜூலி பிஷப் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள தீவிரவாத குழுக்களில் ஆஸ்திரேலிய இளைஞர்கள் இணைவதை தடுக்க அரசு முடிவு செய்து உள்ளது. எனவே, ஆஸ்திரேலியர்கள் ஈராக்கில் உள்ள மொசூல் நகருக்கு செல்ல தடை விதிக்கப்படுகிறது என்று கூறியுள்ளார். ஏற்கனவே ஆஸ்திரேலியர்கள் சிரியாவில் உள்ள ரக்குயா நகருக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

