சிங்கப்பூரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கட்டிட தொழிலாளிக்கு 16 ஆண்டு ஜெயில்
தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தேவராஜன்(வயது 20). இவர் சிங்கப்பூரில் கட்டிட தொழிலாளியாக வ...
https://kandyskynews.blogspot.com/2015/03/16.html

தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தேவராஜன்(வயது 20). இவர் சிங்கப்பூரில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடன் 31 வயது அறிவழகன் என்பவரும் வேலை பார்த்து வந்தார். எனினும் இருவருக்கும் அதிக அறிமுகமில்லை.
இந்த நிலையில் அறிவழகனின் மணிபர்சு காணாமல் போனது. இது தொடர்பாக அவர்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பெரியசாமி அருகில் கிடந்த பாறாங்கல்லை அறிவழகனின் தலையில் போட்டு கொலை செய்தார். இந்த சம்பவத்திற்கு பிறகு அறிவழகனின் உடலை ஒரு மேம்பாலத்தின் அடியில் இருந்து போலீசார் மீட்டனர்.
இந்த வழக்கில் சிங்கப்பூர் கோர்ட்டு பெரியசாமிக்கு 16 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது. மேலும் 12 முறை கசையடி கொடுக்கவும் உத்தரவிட்டது.

