சூதாட்ட விடுதிக்கு சென்ற மொயின் கான்: வெடிக்கும் புதிய சர்ச்சை
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தெரிவுக்குழு தலைவர் மொயின் கான், அதிகாலையில் சூதாட்ட விடுதிக்கு சென்றது சர்ச்சையை ஏ ற்படுத்தியுள்ளது. ...
https://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_89.html
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தெரிவுக்குழு
தலைவர் மொயின் கான், அதிகாலையில் சூதாட்ட விடுதிக்கு சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் விளக்கம் அளிக்குமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது.
உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை காண பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தெரிவுக்குழு தலைவர் மொயின் கான் சென்றுள்ளார்.
இந்நிலையில் பாகிஸ்தான் - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நடந்த போட்டிக்கு முன்னதாக, அதிகாலை 3 மணியளவில் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள சூதாட்ட விடுதிக்கு மொயின் கானும் அவருடன் இரு தெரிவுக்குழு உறுப்பினர்களும் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மேலாளர் நவீத் சீமாவும் உறுதி செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், மொயின் கானை நாடு திரும்ப உத்தரவிடும் எனத் தெரிகிறது.
இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷாகர்யார் கான் கூறுகையில், இந்த விவகாரம் குறித்து உடனடியாக முழு விசாரணை நடத்தப்படும்.
அன்றைய தினத்தில் அதிகாலையில் தனது மனைவியுடன் அந்த சூதாட்ட விடுதிக்கு மொயின் கான் சென்றுள்ளார். இருவரும் அங்கு நின்று புகைப்படங்களும் எடுத்துள்ளனர். குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் மொயின் கான் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன் இரவு நீண்ட நேரம் கழித்து அறைக்கு திரும்பிய சாகித் அப்ரிடி உள்ளிட்ட 8 பாகிஸ்தான் வீரர்களுக்கு தலா 300 அவுஸ்திரேலிய டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

