வஸீமின் ஜனாஸாவை தோண்ட ஏற்பாடு

படுகொலை செய்யப்பட்டுள்ளதாக நம்பப்படும், 2012ஆம் ஆண்டு மர்மமான முறையில் மரணமான பிரபல்யமான றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் ஜனாஸா தோண்...

படுகொலை செய்யப்பட்டுள்ளதாக நம்பப்படும், 2012ஆம் ஆண்டு மர்மமான முறையில் மரணமான பிரபல்யமான றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் ஜனாஸா தோண்டியெடுக்கப்படவுள்ளது என தெஹிவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

விசேட சட்ட வைத்திய குழு முன்னிலையிலேயே அவரது சடலம்  தோண்டியெடுக்கப்படவுள்ளது.



பாதுகாப்பு காரணங்களை கவனத்தில் கொண்டு, 
சடலத்தை தோண்டியெடுக்கும் திகதி மற்றும் நேரத்தை குறிப்பிடமுடியாது என்று இந்த விவகாரம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுக்கும் விசாரணைப்  பிரிவின் அதிகாரியொருவர் தெரிவித்தார். 

 கடந்த அரசாங்கத்தின் பிரபலமான ஒருவரின் மகனுக்கும் இந்த றக்பி வீரரின் மர்ம மரணத்துக்கும் இடையே தொடர்பிருப்பதக சந்தேகிக்கப்படும் நிலையிலேயே ஜனாஸா தோண்டி எடுக்கப்பட்டு விஷேட சட்ட வைத்திய நிபுணர்கள் கொண்ட குழுவொன்றினூடாக பிரேத பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

புதுக்கடை 3 ஆம் இலக்க நீதிவான் நீதிமன்ற நீதிபதி நிஷாந்த பெரேராவுக்கு வஸீம் தாஜுதீனின் மரணம் குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தாக்கல் செய்த விசாரணை அறிக்கையில் அவர் கொலை செய்யப்பட்டிருப்பதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்தே சடலம் மீன்டும் தோண்டி எடுக்கப்படுவது குறித்து தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார் அவரது முதுகெலும்பானது தட்டையான ஆயுதம் ஒன்றினால் முறிக்கப்பட்டுள்ளதாகவும், பற்கள் உடைக்கப்பட்டுள்ளதாகவும், பாதம் கண்ணாடியை ஒத்த ஒரு கூரிய ஆயுதத்தால் வெட்டப்பட்டு எலும்புகளுக்கும் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூரிய ஆயுதம் ஒன்றால் கழுத்திலும் குத்தப்பட்டு காயமேற்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

றக்பி வீரரின் சடலமானது கடந்த 2012 ஆம் ஆண்டு மே 16 ஆம் திகதி நாரஹேன்பிட்டி பிரதேசத்தில் சாலிகா விளையாட்டு மைதானத்தை அண்மித்த பிரதேசத்தில் எரிந்த நிலையில் இருந்த கார் ஒன்றுக்குள் இருந்து மீட்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அது ஒரு விபத்து என பொலிஸார் தெரிவித்ததை அடுத்து சடலமானது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் தெஹிவளை  ஜும் ஆ பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கமும் செய்யப்பட்டது.

எவ்வாறாயினும் அது ஒரு கொலை என தொடர்ச்சியாக சந்தேகம் வெளிப்படுத்தப்பட்ட நிலையில் கடந்த பெப்ரவரி மாதம் முதல் விசாரணைகளை ஆரம்பித்த புலனாய்வுப் பிரிவு, அந்த மரணம் கொலை என்பதற்கான ஆதாரங்களை மன்றுக்கு சமர்ப்பித்திருந்தது. 

தற்போது வஸீம் தாஜுதீனின் சடலம் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள தெஹிவளை முஸ்லிம் மையவாடிக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் சட்ட மா அதிபரின் ஆலோசனை கிடைத்ததும் அரசின் சிரேஷ்ட சட்டவாதி ஹிரான் ரத்னாயக்கவின் மேற்பார்வையில்  சடலத்தை மீண்டும் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் கோரிக்கையை ஏற்றுள்ள மன்று அதற்கு அனுமதியும் வழங்கியுள்ளது.

கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரி அஜித் தென்னகோன், கொழும்பு மேலதிக விஷேட சட்ட வைத்திய நிபுணர்  எச்.டீ.என்.ஹேவகே, கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட வைத்தியத் துறை தொடர்பிலான விஷேட விரிவுரையாளர்  ஜீவா பெரேரா ஆகியோர் முன்னிலையில்  வஸீம் தாஜுதீனின் சடலம் தோண்டி எடுக்கப்பட ஏற்பாடுகள் பூர்த்தியாகியுள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும் இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகரவை தொடர்புகொண்டு வினவிய போது, சடலத்தை தோண்டியெடுப்பதற்கான சட்ட மா அதிபரின் ஆலோசனை நேற்று மாலை வரை கிடைக்கவில்லை என தெரிவித்தார்.

Related

இலங்கை 5530886917928842684

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item