குர்ஆனை கொச்சைப்படுத்தி இனவாத பிரச்சாரத்தை முன்னெடுக்கும் பொதுபலசேனாவை கண்காணிக்கவும்

தேர்தல் ஆணையாளருக்கு முஜிபுர் ரஹ்மான் வேண்டுகோள் அல்குர்­ஆனை கொச்­சைப்­ப­டுத்தி தேர்தல் பிரச்­சா­ரங்­களில் ஈடு­பட்டு அப்­பாவி மக்­க­ளி­டத...

தேர்தல் ஆணையாளருக்கு முஜிபுர் ரஹ்மான் வேண்டுகோள்
அல்குர்­ஆனை கொச்­சைப்­ப­டுத்தி தேர்தல் பிரச்­சா­ரங்­களில் ஈடு­பட்டு அப்­பாவி மக்­க­ளி­டத்தில் இன­வா­தத்தை பரப்­பி­வரும் பொது பல சேனா அமைப்­பி­னரை தொடர்ச்­சி­யாக கண்­கா­ணிக்க வேண்டும் என கொழும்பு மாவட்ட ஐக்­கிய தேசியக் கட்சி வேட்­பாளர் முஜிபுர் ரஹ்மான் தேர்தல் ஆணை­யா­ள­ரிடம் வேண்­டுகோள் விடுத்­துள்ளார். 


அநு­ரா­த­பு­ரத்தில் இடம்­பெற்ற தேர்தல் பிரச்­சா­ரத்­தின்­போது சிறு­பான்மை மக்­களை இழி­வு­ப­டுத்தி, குறிப்­பாக முஸ்­லிம்­க­ளையும் அல் குர்­ஆ­னையும் கொச்­சைப்­ப­டுத்தி உரை­யாற்­றி­யுள்ள பொது­பல சேனா அமைப்பின் அநு­ரா­த­புர மாவட்ட வேட்­பாளர் சுசந்த ரன்­முத்து குமா­ர­ண­சிங்க என்ற வேட்­பாளர் அது குறித்த ஒ ளிப்­ப­தி­வொன்றை சமூக ஊட­கங்கள் மூல­மாக பரப்பி வரு­கின்றார்.

இவ்­வி­டயம் குறித்து சட்­டத்­த­ர­ணி­க­ளாலும் சிவில் அமைப்­பு­களின் பிர­தி­நி­தி­க­ளாலும் தேர்தல் திணைக்­க­ளத்தில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. இது குறித்து உட­ன­டி­யாக விசா­ரணை நடத்­தப்­பட வேண்டும். அத்­துடன் இதற்­கான நட­வ­டிக்கை துரி­தப்­ப­டுத்­தப்­பட வேண்டும் என அவர் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

இதே­வேளை, இன­வாதக் கருத்­துக்­களை பரப்பி நாட்டில் மற்­று­மொரு வன்­மு­றையை கட்­ட­விழ்த்­து­விட முற்­படும் பொது­ப­ல­சே­னாவின் பிர­சார கூட்­டங்கள் மற்றும் தேர்தல் நட­வ­டிக்­கைகள் குறித்து உன்­னிப்­பாக தொடர்ச்­சி­யாக அவதான் செலுத்த வேண்டும் எனவும் முஜிபுர் ரஹ்மான் தேர்தல் ஆணை­யா­ள­ரிடம் வேண்­டுகோள் விடுத்தார். 

நாட்டில் நல்­லாட்­சியை நோக்கி பய­ணிக்­கின்ற வேளையில், முஸ்­லிம்­க­ளையும் ஆல்­குர்­ஆ­னையும் கொச்­சைப்­ப­டுத்தும் செய­லா­னது பார­தூ­ர­மான விட­ய­மாகும்.

சாதா­ரண பௌத்த மக்­களை இன­வாத கருத்­துக்­களால் தூண்டி மற்­று­மொரு வன்­மு­றைக்கு வழி­ச­மைக்கும் செயற்­பா­டாகும். 

முஸ்­லிம்கள் தமது உரி­மை­கள் பாது­காக்­கப்­பட வேண்டும் என்றே குறிப்­பி­டு­கின்­றனர்.

ஏனைய மதத்­த­வர்­க­ளது உரி­மை­களை பறித்­து­விட்டு தாம் மாத்­திரம் வாழ வேண்டும் என்ற எண்ணம் முஸ்­லிம்­க­ளி­டத்தில் இல்லை. அத்­துடன், பல்­லின சமூ­கத்­த­வர்கள் வாழும் இலங்­கையல் நல்­லி­ணக்­கத்­துடன் அனைத்து தரப்­பி­ன­ருடன் இணைந்து வாழ்­வ­தற்கு விரும்­பு­கின்­றனர். 
அத்­துடன், தீவி­ர­வா­தத்தை இஸ்லாம் முழு­மை­யாக எதிர்க்­கின்­றது. அதற்கு துணை போவ­தையும் மிகத் தெளி­வாக தடுக்­கி­றது.

எனவே நாட்­டி­லுள்ள சாதா­ரண அப்­பாவிப் பொது­மக்­க­ளிடம் முஸ்­லிம்கள் பற்றி பிழை­யான கருத்­துக்கள் தோற்­று­விக்­கப்­ப­டு­கின்­றது எனவும் முஜிபுர் ரஹ்மான் சுட்­டிக்­காட்­டினார். 

இவ்­வா­றான செயற்­பா­டு­க­ளா­னது கடந்த வருடம் ஜூன் மாதம் களுத்­துறை மாவட்­டத்தில் இடம்­பெற்ற வன்­மு­றை­போன்று மற்­று­மொரு வன்­மு­றைக்கு தூண்டும் செயற்­பா­டாகும்.

மஹிந்த ராஜ­ப­க்ஷவின் ஆட்சி பொதுபலசேனாவின் செயற்பாடுகளுக்கு பூரண உதவிகளை வழங்கியது. அவர்களுக்கு பாதுகாப்பையும் கொடுத்தது.

ஆனால், இதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒருபோதும் இடமளிக்க மாட்டார் என்பதை பொதுபலசேனா புரிந்துகொள்ள வேண்டும் என முஜிபுர் ரஹ்மான் மேலும் தெரிவித்தார். 

Related

தலைப்பு செய்தி 199441329114984631

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item