டளஸிற்கு மரண அச்சுறுத்தல் விடுத்த சந்தேக நபர் பிணையில் விடுதலை
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப் பெருமவிற்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்படும் வெலிகம பிரதேச சபையின் முன்னாள் தலைவரை மாத்தறை ...

http://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_614.html

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப் பெருமவிற்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்படும் வெலிகம பிரதேச சபையின் முன்னாள் தலைவரை மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்துள்ளது.
தனது சட்டத்தரணியுடன் இன்று மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜரானபோது அவரை பிணையில் விடுவித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 13ம் திகதி வேட்புமனு தாக்கல் செய்வதற்காக சென்றிருந்தவேளை மாத்தறை பிரதேச செயலகத்தில் வைத்து வெலிகம பிரதேச சபையின் முன்னாள் தலைவர் டளஸ் அழகப்பெருமவிற்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் குறித்த நபருக்கு எதிராக, அச்சுறுத்தல் விடுத்தமை மற்றும் மரண அச்சுறுத்தல் விடுத்தமை போன்ற குற்றச்சாட்டுக்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இன்று நீதிமன்றில் ஆஜராகியிருந்த வெலிகம பிரதேச சபையின் முன்னாள் தலைவரை மாத்தறை நீதவான் யுரேஷா டி சில்வா 02 லட்சம் ரூபா சரீர பிணையில் செல்ல அனுமதித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.