பேதமின்றி உரிமைகளைப் பெற்றுக்கொள்ள புரட்சிப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் – அநுரகுமார
மக்கள் விடுதலை முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் அநுரகுமார திசாநாயக்க தலைமையில் கிளிநொச்சியில் நேற்று (23) நடைபெற்றது. யுத்தம் நிறைவுற...


மக்கள் விடுதலை முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் அநுரகுமார திசாநாயக்க தலைமையில் கிளிநொச்சியில் நேற்று (23) நடைபெற்றது.
யுத்தம் நிறைவுற்ற பின்னரும் கூட மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து கொடுக்க ஆட்சியாளர்களால் முடியாது போயுள்ளமையை இந்த பிரசாரக் கூட்டத்தின் போது அநுரகுமார சுட்டிக்காட்டினார்.
வடக்கிலும் கிழக்கிலும் மக்களின் உரிமைகளை பேதமின்றிப் பெற்றுக்கொள்வதற்கான புரட்சிப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் தெரிவித்தார்.
இந்தப் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய மக்கள் விடுதலை முன்னணியின் இராமலிங்கம் சந்திரசேகரன், ஐக்கிய தேசியக் கட்சியும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் வெவ்வேறு கட்சிகள் அல்ல, இரண்டும் ஒன்றே என குறிப்பிட்டார்.
அத்துடன், ஆட்சிப் பீடம் ஏறி 100 நாட்களில் நாட்டின் மத்திய வங்கியில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றுள்ள போது மேலும் 5 வருடங்களுக்கு அவர்களது கையில் நாட்டை ஒப்படைத்தால் எவ்வாறான மோசடிகள் இடம்பெறும் என தமக்குத் தெரியும் எனவும் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.