முஸ்லிம்களுடைய சமய ரீதியிலான நிகழ்வுகளை பயன்படுத்தி பாரிய தேர்தல் விதிமுறை மீறல்கள்
கபே அமைப்பு தேர்தல்கள் ஆணையாளருக்கு ஆதாரங்களுடன் கடிதம்- முஸ்லிம்களின் சமய ரீதியிலான இடங்களையும் அவர்களது சமய நிகழ்வுகளையும் ம...


கபே அமைப்பு தேர்தல்கள் ஆணையாளருக்கு ஆதாரங்களுடன் கடிதம்-
முஸ்லிம்களின் சமய ரீதியிலான இடங்களையும் அவர்களது சமய நிகழ்வுகளையும் மிக சூட்சுமமாக பயன்படுத்தி பாரிய தேர்தல் சட்ட மீறல்கள் இடம்பெற்று வருவதாகவும் அது தொடர்பில் உடன் அவதானம் செலுத்தப்பட வேண்டும் எனவும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே அமைப்பு தேர்தல்கள் ஆணையாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
நாம் மெச்சுகின்றோம். அதே போல் முஸ்லிம்களின் சமய கிரியைகளையும் நாம் மதிக்கின்றோம்.
இறைவன் கூறியுள்ளவாறு அவர்கள் தமது செல்வத்தில் இருந்து பிறருக்கு கொடுப்பதை நாம் மதிக்கின்றோம்.
எனினும் அத்தகைய நல்ல செயற்பாடுகள் தற்போது நாடளாவிய ரீதியில் வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றது. இத்தேர்தல் காலத்தில் பொருட்கள் பகிர்ந்தளிப்பது உள்ளிட்ட பல செயற்பாடுகளை தேர்தல்கள் சட்டம் தடைச் செய்கின்றது.
எனினும் சமய ரீதியிலான அனுட்டானங்களை அது தடை செய்யவில்லை.
இந் நிலையில் இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ள அமைச்சர்கள், முன்னாள் பராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வேட்பாளர்கள் என பலர் முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள், நோன்பு திறக்கும் வைபவங்கள் உள்ளிட்ட பல சமய நிகழ்வுகள் ஊடாக மிக சூட்சுமமாக பொருட்கள் பகிர்ந்தளிக்கும் செயற்பாடுகளையும் வாக்குகளுக்கு விலை நிர்ணயம் செய்யும் நடவடிக்கைகளையும் முன்னெடுக்கின்றனர். இது வாக்காளர்களின் உரிமையை மீறும் செயற்பாடாகும்.
எனவே அது தொடர்பில் உடன் அவதானம் செலுத்த வேண்டும்.
அதனாலேயே தேர்தல்கள் ஆணையாளருக்கு அவ்வாறான ஆதாரங்களுடன் கடிதம் ஒன்றினை நாம் அனுப்பியுள்ளோம் என்றார்.