இன்று மாலை சிரிகொத்த சென்ற ஹிருனிகா….! விரைவில் முடிவு
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வேட்புமனு வழங்க தீர்மானித்தமையை தொடர்ந்து சுதந்திர கூட்டமைப்பு உறு...

http://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_34.html

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வேட்புமனு வழங்க தீர்மானித்தமையை தொடர்ந்து சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர்கள் பலர் ஐக்கிய தேசிய கட்சி நோக்கி தாவ உள்ள செய்தியை ஐக்கிய தேசிய கட்சி சிரேஷ்ட உறுப்பினர் அமைச்சர் ஒருவர் மடவளை நியுசுக்கு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் மேல் மாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் ஹிருனிகா பிரேமச்சந்ர இன்று மாலை சிரிகொத்த சென்று ஐக்கிய தேசிய கட்சியில் இனைந்துகொள்ள பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக சிரிகொத்த செய்திகள் மடவளை நியுசுக்கு உறுதிப்படுத்திய நிலையில் வரும் பொதுதேர்தலில் அவர் கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.
இன்று ஹிருனிகா ஐக்கிய தேசிய கட்சி இடையேயான பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ள நிலையில் ஹிருனிகா ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்துகொள்வார் என தெரிகிறது….
1