குற்றங்கள் நிரூபிக்கப்படாமல் வவுனியா அரசாங்க அதிபரை இடமாற்றக்கூடாது!- ஜனாதிபதிக்கு கடிதம்

வவுனியா மாவட்ட செயலாளர் பந்துல ஹரிச்சந்திர தவறு செய்திருந்தால் அதற்காக ஒழுக்காற்று ரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் குற்றச்சாட்டி...

வவுனியா மாவட்ட செயலாளர் பந்துல ஹரிச்சந்திர தவறு செய்திருந்தால் அதற்காக ஒழுக்காற்று ரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் குற்றச்சாட்டின்றி அவரை இடமாற்றம் செய்யக் கூடாதென இலங்கை நிர்வாக சேவைச் சங்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கடிதமூலம் கேட்டுள்ளது.
பந்துல ஹரிச்சந்திர இலங்கை நிர்வாக சேவையில் சிறந்த அதிகாரி. எமது சங்கத்தின் செயற்பாட்டு உறுப்பினர் உதவி தேர்தல் ஆணையாளராக, பிரதேச செயலாளராக, மேலதிக மாவட்ட செயலாளராக என்றெல்லாம் அவர் உயர் பதவிகளை வகித்தவர் என்றும் சங்கத் தலைவர் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.

அரச ஊழியர் ஒருவரை மாகாண சபைக்கு இடமாற்றம் செய்ய இயலாது. அமைச்சரவை அரச சேவை ஆணைக்குழு ஆகியவற்றினாலேயே அதனை மேற்கொள்ள இயலும்.

மாகாண சபையினால் பிரேரணை நிறைவேற்றியதன் மூலம் அரச அதிகாரிகளை இடமாற்றம் செய்ய முடியாது.

அவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் இருந்தால் அதனை விசாரித்து தீர்மானம் எடுக்க வேண்டும்.

அவ்வாறு செய்யாமல் நடவடிக்கை மேற்கொள்வது நல்லாட்சிக்கு பொருத்தமானதாக இருக்காது.

இவ்வாறான பிரேரணையை பிரேரிப்போரும் அரச ஊழியர் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பாக அறியாத ஒருவகை அரசியல்வாதிகள் என்பது தெளிவாகிறது.

2012 ல் இந்த அதிகாரியின் விருப்பு, வெறுப்பைக் கருத்திற் கொள்ளாமல் இவர் இடமாற்றம் செய்யப்பட்டார்.

தாம் வசிக்கும் மாகாணத்திலிருந்து 400 கிலோ மீற்றர் தூர இடத்துக்கு வட மாகாணத்துக்கு அனுப்பப்பட்டார்.

அவர் குடும்பத்தை விட்டும் பிரிந்து குடும்ப நலன்களையும் பாராமல் அரச சிங்கள அதிகாரியாக தமிழ் மக்களுக்கு செய்த சேவையை பாராட்டாமல் இவ்வாறு அவமானப்படுத்துவது அதிகாரிகளை மனக்கிலேசத்துக்கு உள்ளாக்கும் சம்பவமாகுமென சங்கத் தலைவர் சந்திரரத்ன பல்லேகம தமது கடிதத்தில் தொடர்ந்து கூறியுள்ளார்.

Related

இலங்கை 7565692482830904013

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item