பொதுத் தேர்தல் குறித்து ஜனாதிபதி விசேட அறிவிப்பு
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட அறிவிப்பு ஒன்றை விடுக்க உள்ளார்....


எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட அறிவிப்பு ஒன்றை விடுக்க உள்ளார்.
குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு என்ன காரணத்திற்காக வேட்பு மனு வழங்கப்பட்டது என்பது குறித்து நாட்டு மக்களுக்கு விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்வரும் திங்கட்கிழமை நண்பகலுடன் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.
மஹிந்தவிற்கு வேட்பு மனு வழங்கியமை அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபாலவிற்கு ஆதரவளித்த முக்கிய உறுப்பினர்களான ராஜித சேனாரட்ன, அர்ஜூண ரணதுங்க, சம்பிக்க ரணவக்க உள்ளிட்டவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.