ஐ.எஸ் அமைப்பில் சேர வீட்டை விட்டு வெளியேறிய 43 இளம் பெண்கள்: கவலையில் பெற்றோர்கள்

ஆம்ஸ்டர்டாம்: மேற்கத்திய நாடுகளிலிருந்து நூற்றுக்கணக்கான இளம் பெண்களும், சிறுமிகளும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்து போரிடுவதற்காக செல்வது, உளவ...

ISIS Female jihadis : 43 girls left home to join fighters,Says reports
ஆம்ஸ்டர்டாம்: மேற்கத்திய நாடுகளிலிருந்து நூற்றுக்கணக்கான இளம் பெண்களும், சிறுமிகளும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்து போரிடுவதற்காக செல்வது, உளவுத்துறையினருக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் பெரும் கவலையாக மாறியுள்ளது. 14, 15 வயதேயான இளம் சிறுமிகள் கூட ஆயுதம் ஏந்திப் போராடுவதற்காக சிரியாவுக்குச் செல்லும் இளம் பெண்கள், அங்கு தீவிரவாதிகளை மணந்து கொள்வதும், அவர்களுக்கு செக்ஸ் அடிமைகளாக மாறி பிள்ளை பெற்றுக் கொடுப்பதும், கவலை தரும் விஷயமாக மாறியுள்ளது.

அந்த அமைப்பில் இணையும் இளம் பெண்கள் அதிக குழந்தைகள் பெற்றுத் தர ஆர்வம் காட்டுகின்றனர். அதிக குழந்தைகள் பிறந்தால், போராட்டத்திற்கு கூடுதலாக ஆட்கள் கிடைப்பார்கள் என்பதாலேயே இவ்வாறு அறிவுறுத்தப்படுகின்றனர். ஆரம்பத்தில் இளம் பெண்களை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் செக்ஸ் அடிமைகளாக வைத்திருப்பதாக கருதப்பட்டது.

ஆனால் வீட்டு வேலை செய்வது உள்ளிட்ட பல வேலைகளுக்காகவும் அவர்கள் எடுப்பதாக தகவல்கள் தெரிவித்தன. தற்போது இந்தப் பெண்கள் வேறு பல வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள். ஒரு சில பெண்கள் ஆயுதம் ஏந்தி போராடுகின்றனர். ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைந்துள்ள பல பெண்கள் பேஸ்புக், டிவிட்டர் மற்றும் பிற சமூக வலைதளங்களில் அவற்றைப் பற்றி பிரபலப்படுத்துகிறார்கள். இதில் ஈர்க்கப்படும் ஐரோப்பிய நாட்டு இளம் பெண்கள் தங்களின் சொந்த வீடுகளை விட்டு வெளியேறுகின்றனர் என்பதால் பெற்றோர்களும் கவலையடைந்துள்ளனர்.

Related

உலகம் 9039973604930530230

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item