16 வயது வயது சிறுமியை நிர்வாணமாக படமெடுத்த இளைஞர் கைது
கையடக்க தொலைபேசியின் மூலம் 16 வயது சிறுமியை ஆபாச படம் எடுத்த 27வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகா...


கையடக்க தொலைபேசியின் மூலம் 16 வயது சிறுமியை ஆபாச படம் எடுத்த 27வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை இவரை கைதுசெய்துள்ளது.
குறித்த ஆள் சிறுமியை நிர்வாணமாக படம் எடுத்து அவற்றை தமது நண்பர்களுக்கு பகிர்ந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த இளைஞர் குறித்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறியே நிர்வாணப்படங்களை எடுத்துள்ளார்.
எனினும் அவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
இதனையடுத்து பாதிக்கப்பட்டவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையிலேயே சம்பந்தப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவி நட்டேஷா பாலேந்திரா தெரிவித்துள்ளார்.