சகலருக்கும் நீதியும் நியாயமுமான பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்படல் வேண்டும்: NSC

அப்துல்லாஹ் :இலங்கையிலுள்ள எந்தவொரு சமூகத்தினதும் இனக்குழுவினதும் பாராளுமன்றப் பிரதிநிதித்துவமானது அந்தந்த தரப்பினரது, தேசிய விகிதாசாரத்தி...

NIC 2
அப்துல்லாஹ் :இலங்கையிலுள்ள எந்தவொரு சமூகத்தினதும் இனக்குழுவினதும் பாராளுமன்றப் பிரதிநிதித்துவமானது அந்தந்த தரப்பினரது, தேசிய விகிதாசாரத்திற்கு ஏற்ற வகையில் அமைதல் இணைப்பு 2வேண்டும் என தேசிய ஷூறா சபை வலியுறுத்துகிறது. ஆனால் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்ட 20 ஆவது திருத்தச் சட்ட வரைபு இதனைக் கருத்தில் கொண்டதாக அமையவில்லை. எனவும் அதன் காரணமாக அமைச்சரவையினால் தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச் சட்டம் கொண்டுள்ள உத்தேச தேர்தல் முறை திருத்தச் சட்டமூலத்திற்கு தேசிய ஷுரா சபை இன்று தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது

இந்த சட்டமூலம் அமுல்படுத்தினால் நாட்டின் சிறுபான்மையினருக்கு பாரிய பாதிப்பு எனவும் அச்சபை தெரிவித்தது.இது தொடர்பில் அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடொன்றை தேசிய ஷூறா சபை கொழும்பு தேசிய நூலக கேட்போர்கூடத்தில் இன்று நடத்தியது.

இங்கு கருத்துத் தெரிவித்த அதன் பிரதிநிதிகள்

இந்த உச்தேச சட்டமூலத்தினால் தற்போதுள்ள முஸ்லிம் பாராளுமன்ற பிரநிதித்துவம் 50 வீதமாகக் குறைக்கப்படும். இதனால் முஸ்லிம் சமூகம் தமது இன விகிதாசாரமான 10.3 வீதத்திற்கு ஏற்ற வகையில் முஸ்லிம்களுக்குரிய பாராளுமன்ற பிரநிதித்தை இழக்கும் முஸ்லிம்களின் 10.3 வீதத்திற்கு ஏற்ற வகையில் இச்சட்டம் திருத்தப்படல் வேண்டும்.

இரட்டை வாக்குமுறை மற்றும் மாவட்ட விருப்பு வாக்கு முறையை உள்வாங்கப்பட வேண்டும். எமது அமைப்பு ஏற்கனவே ஜனாதிபதியிடம் முஸ்லிம் சமுகத்தின் பிரநிதித்துவம் பற்றியும் 20ஆவது தேர்தல் சீர்திருத்தம் பற்றியும் பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளது .

வடக்கு, கிழக்கு உட்பட ஏனைய பிரதேசங்களிலும் முஸ்லிம்கள் ஏனைய சமூகங்களோடு பின்னிப்பிணைந்து செறிந்து வாழ்கின்றனர். அவர்களது மக்கள் பிரநிதித்துவம் பாதுகாக்கப்படல் வேண்டும். இந்த சட்ட மூலத்தினால் முஸ்லிம்கள் 10 க்கும் குறைவான பாராளுமன்ற உறுப்பினர்களை மாத்திரமே பெறக்கூடிய வாய்ப்பு உள்ளது. இது அமுலுக்கு வந்தால் கிழக்குக்கு வெளியே மலையக மற்றும் ஏனைய முஸ்லிம்களது பிரநித்துவம் இரவோடு இரவாக இல்லாமல் செய்யப்பட்டு விடும்.

இது தொடர்பான மேலதிக தகவல்கள் பின்னர் பதிவு செய்யப்படும்

இணைப்பு 2

தேர்தல் முறை ஊடாக நல்லிணக்கத்தைப் பாதிக்கும் சூழ்நிலை தோன்றிவிடக் கூடாது

தேசிய ஷூறா சபையானது தேசிய அளவில் இயங்கும் முன்னணி முஸ்லிம் நிறுவனங்கள், கல்வியாளர்கள், தொழின்மையாளர்கள், செயற்பாட்டாளர்களின் கூட்டிணைப்பாகும். நமது நாட்டின் தேர்தல் முறையை மாற்றியமைப்பதற்காக மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களது தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை தேசிய ஷூறா சபை வரவேற்கிறது.

குறிப்பாக விருப்பு வாக்குமுறையை மாற்றியமைத்தல், தேர்தல் தொகுதியை பாராளுமன்ற உறுப்பினர் பிரதிநிதித்துவப்படுத்தும் முறையை மீண்டும் அமுலுக்குக் கொண்டு வருதல் ஆகியன பொருத்தமான முன்னெடுப்புகளே என தேசிய ஷூறா சபை கருதுகிறது.

நாடாளுமன்றமானது மக்கள் பிரதிநிதிகள் சபையாகவே அறியப்பட்டு வருகிறது. சிங்கள, தமிழ், முஸ்லிம், மலையக தமிழ், மலாய், பறங்கிய சமூகத்தை சேர்ந்த அனைத்து தரப்பினரது பிரதிநிதிகளும் உள்ளடங்கியதாக அது அமைதல் வேண்டும் என்பதே இதன் பொருளாகும்.

இலங்கையிலுள்ள எந்தவொரு சமூகத்தினதும் இனக்குழுவினதும் பாராளுமன்றப் பிரதிநிதித்துவமானது அந்தந்த தரப்பினரது, தேசிய விகிதாசாரத்திற்கு ஏற்ற வகையில் அமைதல் வேண்டும் என தேசிய ஷூறா சபை வலியுறுத்துகிறது.

புதிய தேர்தல் முறை இதனைக் கருத்தில் கொண்டு செயற்படுவது இன்றியமையாததாகும். எமக்குக் கிடைக்கின்ற ஊடக தகவல்களின் பிரகாரம், கடந்த 08/06/2015 இல் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்ட 20 ஆவது திருத்தச் சட்ட வரைபு இதனைக் கருத்தில் கொண்டதாக அமையவில்லை.

இலங்கை ஒரு பன்மைத்துவப் பண்பு கொண்ட நாடு. இங்கு பலதரப்பட்ட சிறுபான்மை சமூகத்தினர் உள்ளனர். இவர்கள் பரவலாக சிதறியும், சில இடங்களில் செறிவாகவும் வாழ்கின்றனர்.

தற்போதைய முன்மொழிவு தேர்தல் தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில் அமைந்துள்ளது. இப்போது காணப்படும் தேர்தல் தொகுதிகளை அல்லது தொகுதிகளின் சில பாகங்களை இணைத்து, தொகுதிகளை புதிதாக எல்லை நிர்ணயம் செய்யும் சூழ்நிலையை ஏற்படுத்தும். இது கடினமான, நீண்ட காலம் எடுக்கும் செயன்முறையாய் அமையும்.

இதன் மூலம் சமூகங்களிடையே புரிந்துணர்வின்மை, துருவமயமாதல் போன்ற எதிர் விளைவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. போருக்குப் பிந்திய இலங்கையில் புரிந்துனர்வின்மைக்குப் பதிலாக, மீளிணக்கமும் சமாதான சகவாழ்வும் அதிகம் வலியுறுத்தப்பட வேண்டும். அவை நடைமுறைச் சாத்தியங்களாக, யதார்த்தங்களாக மாற்றியமைக்கப்பட வேண்டும்.

எனினும், இந்த தேர்தல் முறை ஊடாக அவ்வாறான நல்லிணக்கத்தைப் பாதிக்கும் சூழ்நிலை தோன்றிவிடக் கூடாது என தேசிய ஷூறா சபை வேண்டிக் கொள்கிறது. நாட்டின் எதிர்கால நன்மை கருதியே அது இந்நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது.

புதிய திருத்தங்கள் ஏற்படுமாயின், நாடாளுமன்றத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் 50% இனால் குறைவடையக் கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. இதுபோலவே சிறுபான்மை சமூகங்களினதும் இனங்களினதும் பிரதிநிதித்துவம் குறைவடையலாம். இதனால் சிறிய கட்சிகளும் பாதிப்படையும். இது ஜனநாயகப் பண்பைப் பலவீனப்படுத்துவதாய் அமையும்.

இந்த இக்கட்டான நிலையை ஓரளவு சீர் செய்ய, நாடாளுமன்றத் தேர்தலில் வேறு சில நாடுகளில் உள்ளது போன்ற இரட்டை வாக்கு முறையை அமுல்படுத்துவது குறித்து கூடுதல் கவனத்தைச் செலுத்துமாறு தேசிய ஷூறா சபை அரசாங்கத்தை வேண்டிக் கொள்கிறது.

அனைத்து வகையான வெட்டுப் புள்ளி முறையையும் நீக்கி விடுமாறு தேசிய ஷூறா சபை அரசாங்கத்தை வேண்டிக் கொள்கிறது.

எல்லை நிர்ணய ஆணைக்குழுவில், நாட்டிலுள்ள அனைத்து இனங்களதும் சமூகங்களதும் பிரதிநிதிகள் உள்ளடக்கப்பட வேண்டும். அவர்கள் அனைவரதும் அபிலாஷைகளும் கருத்துகளும் உள்வாங்கப்பட்டு, சகலருக்கும் நீதியும் நியாயமுமான பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்படல் வேண்டும் என தேசிய ஷூறா சபை வலியுறுத்துகிறது.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொள்ளும் தேசிய ஷூறா சபையினர் 1. ஜே.தாரிக் மஹ்மூத் – தலைவர், 2. டீ.கே. அஸூர் – பிரதித் தலைவர், 3. அஷ்ஷெய்க் மஸீஹுத்தீன் இனாமுல்லாஹ் – உதவி பொதுச் செயலாளர் ,4. எம்.எச்.எம்.ஹசன் – நிறைவேற்றுக்குழு அங்கத்தவர்

NIC 2
NIC 1

Related

தலைப்பு செய்தி 6395208481070506236

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item