அரசியலமைப்புச் சபைக்கு சிவில் உறுப்பினர்கள் இல்லையாம் : முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லை !!
அரசியலமைப்புச் சபைக்கு சிவில் உறுப்பினர்கள் தற்போதைய நாடாளுமன்றத்தினால் நியமிக்கப்பட மாட்டார்கள் என அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன த...
http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_846.html
சிவில் உறுப்பினர்கள் நியமிக்கப்படாமல் தற்போதுள்ள 7 உறுப்பினர்களுடன் அரசியலமைப்புச் சபையை இயங்க செயவது என அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில், 7 உறுப்பினர்களுடன் அரசியலமைப்புச் சபை கூடிய சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிக்க உள்ளதாகவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.
அதேவேளை அரசியலமைப்புச் சபைக்கு 7 பாராளுமன்ற உறுப்பினர்களில் முஸ்லிம் சமூகத்தை பிரதிநித்துவப் படுத்த எவரும் நியமிக்கபடாமையால் அதிர்ப்தி வெளியிடப்பட்ட நிலையில் சிவில் சமூகத்தில் இருந்து மூவரின் பெயர் முன்மொழியப்பட்டதில் முஸ்லிம் சமூகத்தை பிரதிநித்துவப் படுத்தும் வகையில் ஒருவரின் பெயரும் உள்ளகட்டிருந்த நிலையில் பாராளுமறத்தில் அவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு பாராளுன்ரத்தின் அனுமதியுடன் அவர்கள் நியமிக்கப்பட்ட இருந்த நிலையில் பாராளுமன்ற குழப்ப நிலைகாரணமாக குறித்த பெயர்கள் பாராளுமன்றத்தில் சமர்பிக்க முடியாது போயுள்ளதாக தெரிவிக்கபடுகிறது
இதனிடையே கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் மூன்று சிவில் உறுப்பினர்களையும் பாராளுமன்ற விவாதமின்றி அங்கீகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.பாராளுமன்றம் இன்று கூடும் போது சிவில் உறுப்பினர்களை அனுமதிப்பது குறித்து பாராளுமன்றில் அறிவிக்கப்பட உள்ளது. என முன்னர் தெரிவிக்கப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
ஏ.எல்.எம். சலாம் ,ராதீகா குமாரசுவாமி, ஏ.ரீ. ஆரியரட்ன ஆகியோர் இந்தக் குழுவில் நியமிக்கப்பட இருந்தனர்