இந்தோனேஷியாவில் கொல்லப்பட்ட அவுஸ்திரேலியர்கள்: கடுமையான குடியேற்ற கொள்கை தான் காரணமா?

அவுஸ்திரேலியாவின் புதிய குடியேற்ற கொள்கையினால் தான், 2 அவுஸ்திரேலியர்கள் இந்தோனேஷியாவில் கொல்லப்பட்டிருப்பதாக அவுஸ்திரேலிய பத்திரிக்கை ஒன்று...

அவுஸ்திரேலியாவின் புதிய குடியேற்ற கொள்கையினால் தான், 2 அவுஸ்திரேலியர்கள் இந்தோனேஷியாவில் கொல்லப்பட்டிருப்பதாக அவுஸ்திரேலிய பத்திரிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் பிடிபட்ட 2 அவுஸ்திரேலியர்கள் உள்பட 7 வெளிநாட்டினருக்கு இந்தோனேஷியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இந்த சம்பவம் சர்வதேச சமூகத்தின் இடையே பலத்த கண்டனங்களுக்கு ஆளானது. இதைத் தொடர்ந்து இந்தோனேஷியாவில் இருந்து தனது தூதரை அவுஸ்திரேலியா திரும்ப பெற்றது.

இந்நிலையில் இந்தோனேஷியாவில் 2 அவுஸ்திரேலியர்கள் கொல்லப்பட்டிருப்பதற்கு அவுஸ்திரேலியாவில் கடைபிடிக்கப்படும் கடுமையான புதிய குடியேற்ற கொள்கை முறைதான் காரணம் என்று இந்தோனேஷிய மனித உரிமை ஆணைய தலைவர் கில்லியன் ட்ரிக்ஸ் கூறியதாக அவுஸ்திரேலிய பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டு உள்ளது.


இது தொடர்பாக அதில் அவர் மேலும் கூறுகையில், அகதிகளாக இந்தோனேஷியர்கள் அவுஸ்திரேலியாவுக்கு வரும் போது அவர்கள் நடுக்கடலில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

இதன் பிறகு ஏற்படும் விளைவை பற்றி நாம் நினைத்ததுண்டா? என்று அவர் அதில் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆனால் இவரின் இந்த கருத்தை அவுஸ்திரேலிய அரசு மறுத்துள்ளது. இது சட்டத்துக்கு புறம்பானது என்று விளக்கம் அளித்துள்ளது.

மேலும், இந்த கருத்து அவுஸ்திரேலிய அரசு, பொதுமக்கள் மற்றும் கொல்லப்பட்ட 2 பேரின் குடும்பத்தினருக்கு எதிரானது என்று குடியுரிமைத்துறை மந்திரி பீட்டர் டட்டன் குற்றம் சாட்டியுள்ளார்.


Related

தலைப்பு செய்தி 4901941307183009621

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item