’ஊழல் என்ற புற்று நோயை ஒழித்துக்கட்டுவோம்’: உலக தலைவர்களுக்கு பிரதமர் கேமரூன் அழைப்பு.

உலகளவில் அரசு மற்றும் தனியார் அமைப்புகளில் நடைபெறும் மாபெறும் ஊழல்களை ஒழித்து கட்ட சர்வதேச அரசியல் தலைவர்கள் முன் வர வேண்டும் என பிரித்தானிய...

உலகளவில் அரசு மற்றும் தனியார் அமைப்புகளில் நடைபெறும் மாபெறும் ஊழல்களை ஒழித்து கட்ட சர்வதேச அரசியல் தலைவர்கள் முன் வர வேண்டும் என பிரித்தானிய பிரதமரான கேமரூன் வலியுறுத்த உள்ளார்.
ஜேர்மனியில் நாளை நடைபெற உள்ள ஜி-7 உச்சி மாநாட்டில் பிரித்தானிய பிரதமரான டேவிட் கேமரூன், அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே, இத்தாலி பிரதமர் மேட்டியோ ரென்ஸி, கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பர், ஜப்பான் பிரதமர் சின்சோ அபே, ஜேர்மனி சான்சலர் ஏஞ்சிலா மெர்க்கல் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த உச்சி மாநாட்டில், சர்வதேச அளவில் உள்ள முக்கிய பிரச்சனைகள் குறித்து விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளது.

பிரித்தானிய பிரதமரான கேமரூன் தனது உரையில், உலக நாடுகளின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ள ஊழல் என்ற புற்றுநோயை ஒழிக்க வேண்டும் என உலக தலைவர்களை வலியுறுத்துவார் என செய்திகள் வெளியாகியுள்ளன.


முக்கியமாக, சர்வதேச கால்பந்து சம்மேளனமான பிஃபாவில் நடைபெற்ற ஊழலை அவர் சுட்டிக்காட்டுவதுடன், சர்வதேச அளவில் உள்ள முக்கிய அமைப்புகள், அவற்றில் நடைபெறும் ஊழல் குறித்து அவர் விரிவாக உரையாற்றுவார் என தெரிகிறது.

மேலும், ஊழல் குறித்து உலக தலைவர்கள் வெளிப்படையாக ஆலோசனைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் வலுயுறுத்துவார்.

ஆப்பிரிக்காவில் உள்ள 10 நாடுகளில் 7 நாடுகள் ஊழலால் மூழ்கியுள்ளது என்றும் இதனை களைவது ஒவ்வொரு தலைவரின் பொறுப்பு என கோரிக்கை விடுக்கவுள்ளார்.

மேலும், சர்வதேச அளவில் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் வேகப்படுத்துவது தான் ஐ.நா சபயின் அடுத்த 15 ஆண்டுகளின் முக்கிய நோக்கமாக இருக்கும் என அவர் உச்சி மாநாட்டில் தெரிவிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சர்வதேச அளவில் முக்கிய தலைவர்கள் பங்கேற்கும் இந்த உச்சி மாநாட்டிற்கு சுமார் 17 ஆயிரம் பொலிசார் மூலம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related

தலைப்பு செய்தி 884813605568392218

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item