நட்டாஷாவின் திருமண செலவு குறித்தா நாமல் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்?
பொலிஸ் நிதி மோசடிப் பிரிவினால் நாமல் ராஜபக்ச விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார் என அவர் தனது டுவிட்டர் கணக்கில் பதிவு செய்த செய்திகள் ஏற்கனவே...
http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_782.html
எனினும் நாமல் ராஜபக்சவை விசாரணைக்கு அழைக்கவில்லை என பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், நாமல் ராஜபக்ச ஏன் விசாரணைக்கு அழைக்கப்பட்டார் என்பது குறித்த உள்ளக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அவ்வளவாக பிரபலம் இல்லாத சிங்கள பாடகி நட்டாஷா அண்மையில் பிரிஹானை திருமணம் செய்தார். நட்டாஷா மற்றும் பிரிஹான் திருமணத்திற்கு 20 மில்லியன் ரூபாய் செலவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
திருமணத்திற்காக இவ்வளவு பெரிய தொகையினை செலவிடக்கூடிய நிலையில் நட்டாஷா மற்றும் பிரிஹான் இல்லையென்பது அவரை தெரிந்த அனைவருக்கும் தெரிந்ததுதான்.
நட்டாஷா பிரபல பாடகி அல்ல, அவர் வசதியான குடும்ப பின்னணியை சேர்ந்தவரும் அல்ல. அவரை கரம்பிடித்த பிரிஹான் என்பவரும் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர் அல்ல. சிங்கள பிரபல பாடகர்களான பாத்தியா, சந்தோஷிடம் மாதாந்த சம்பளத்திற்கு வேலை செய்பவர்.
இந்தநிலையில், திருமணத்திற்கு 200 இலட்சத்தை அவர்கள் எப்படி செலவிட்டார்கள் என ஆராய்ந்த சமயத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சிக்கியுள்ளார்.
நட்டாஷா தனது உடைக்கு மாத்திரம் 1 மில்லியன் செலவு செய்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியது. திருமண நாள் அன்று பாடகர்களுக்கு பணம் கையில் வழங்கப்பட்டுள்ளது. தேசிய நிதி சட்டத்தின் கீழ் இவர்கள் மீது வழக்கு தொடர்ந்து பொலிஸ் நிதி மோசடி பிரிவு விசாரணை செய்ய முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொழும்பில் அமைந்துள்ள பிரபல ஹில்டன் விடுதியில் திருமணத்திற்கு வந்திருந்த பலரும், இவை முன்னாள் அரசர்களின் மகன்மார்களுக்கு பந்துபிடித்தால் கிடைக்கும் சுகங்கள் என கூறிக்கொண்டுள்ளார்கள்.
நட்டாஷாவின் திருமண செலவை முன்னாள் ஜனாதிபதியின் மகன் நாமல் மற்றும் யோசித்த தான் ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. நட்டாஷாவுடன் நாமல் மற்றும் யோஷித்தவுக்கு எவ்வாறான தொடர்பு உள்ளது என்பது குறித்து எங்களுக்கு அவசியமற்றது.
எனினும் நெருங்கிய ஒருவருக்கு 200 இலட்சம் பணம் வழங்கும் அளவுக்கு இந்த பணம் எங்கிருந்து வந்தது என்பன தொடர்பில் பொலிசார் விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.