தற்போதிய பாராளுமன்றத்தின் நாட்கள் எண்ணப்படுகிறது !!

அரசியலமைப்பின் 20ஆம் திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதில் தடை ஏற்பட்டால் நாடாளுமன்றம் உடனடியாக கலைக்கப்படும் என ஜனாதிபதி மை...

அரசியலமைப்பின் 20ஆம் திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதில் தடை ஏற்பட்டால் நாடாளுமன்றம் உடனடியாக கலைக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சிவில் சமூக பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். புதிய தேர்தல் முறை அடங்கிய 20ஆம் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்து ஐந்து மாதங்களாக இது குறித்து சுயாதீமாக விவாதிக்கப்பட்டு வருகின்றது. எனது 40 வருட அரசியல் வாழ்க்கையில், சட்ட மூலம் ஒன்று தொடர்பில் இந்த அளவு சுதந்திரமாக விவாதம் செய்ய எந்த அரசாங்கமும் அனுமதி வழங்கவில்லை.

அத்துடன் 18ம் திருத்தச் சட்டத்தை அமைச்சரவையில் கூட விவாதிக்கவில்லை. சில நாடாளுமன்ற உறுப்பினர்களும், பொது மக்களும் அதன் உள்ளடக்கங்கள் குறித்தும் அறிந்திருக்க மாட்டார்கள். ஆனால் தற்போதைய நல்லாட்சி இதற்கு முழுமையான சுதந்திரத்தை வழங்கி இருக்கிறது.

எவ்வாறாயினும், இதனை நிறைவேற்றிக் கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், அதற்கு ஒத்துழைப்பு வழங்காதவர்கள் யார்? என்பது தொடர்பில் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். அத்துடன் நிறைவேற்ற முடியாமல் போனால், நாடாளுமன்றத்தை கலைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறினார்.

இதேவேளை இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் கலந்து கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் உரையாற்றும் போது, தேர்தல் திருத்தச் சட்டம் தொடர்பில் இன்னும் இணக்கப்பாடு ஏற்படுத்தப்படவில்லை, இது தொடர்பில் பல்வேறு முரண்பாடுகள் காணப்படுகின்றன எனவே இது தொடர்பில் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியுள்ளதாக தெரிவித்தார்.

இது தொடர்பில் மாதுலுவாவே சோபித்த தேரர் குறிப்பிட்டதாவது, 20ஆம் திருத்தச்சட்டம் எப்படியேனும் நிறைவேற்றப்பட வேண்டும். 20ஆம் திருத்தச்சட்டம் நிறைவேற்றுவதனை வலியுறுத்தி எதிர்வரும் காலத்தில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தை கலைக்க ஜனாதிபதி இணக்கம்: அமைச்சர் அகில விராஜ் காரியவசம்நாடாளுமன்றத்தை கலைக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணங்கியுள்ளதாக அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பேச்சாளருமான அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இது குறித்து கலந்துரையாடியுள்ளதுடன் அவர்கள் இருவரது இணக்கத்திற்கு அமையவே அனைத்தும் நடைபெறும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.எதிர்க்கட்சிகளின் கண்காட்சிகள் இன்னும் குறுகிய காலத்தில் முடிந்து விடும்.

உறுதியாக திகதி எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் நாடாளுமன்றத்தை கலைப்பதாக ஜனாதிபாதி உறுதியாக இணங்கியதாகவும் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்

Related

தலைப்பு செய்தி 990002463436609500

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item