நாடாளுமன்றத்தில் தனித்து இயங்க போகும் ஜே.வி.பி!
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவது போல் நாடாளுமன்றத்திலும் தனித்து இயங்க போவதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளதாக...
http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_566.html
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான பிரசாரங்களை மேற்கொண்டிருந்த மக்கள் விடுதலை முன்னணி, மகிந்த ராஜபக்சவின் கடையில் இருக்கும் பொருட்கள் விஷத்தன்மை கொண்டது எனவும் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் கடையில் இருக்கும் பொருட்கள் நம்பத்தன்மையற்றவை என கூறி பிரசாரங்களை முன்னெடுத்ததாக அதன் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், எதிர்வரும் தேர்தலில், மைத்திரிபால சிறிசேனவின் கடையில் இருக்கும் பொருட்கள் நம்பகத்தன்மையற்றவை எனவும் கடந்த சில மாதங்களாக கூட்டணி அரசாங்கத்துடன் இணைந்து நடத்திய கடையின் பொருட்களும் நம்பகத்தன்மையற்றவை எனக் கூறி மக்கள் விடுதலை முன்னணி பிரசாரங்களை முன்னெடுக்க உள்ளதாக பேசப்படுகிறது.
மக்கள் விடுதலை முன்னணி கூறிய கதை உண்மை என ஒப்புவிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால், மக்கள் விடுதலை முன்னணியின் பின்னால் பெருமளவிலான மக்கள் ஒன்று திரண்டுள்ளதாக ரில்வின் சில்வா கூறியுள்ளார்.
மக்களின் ஆதரவு அதிகரித்துள்ளதால், மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக தமது முன்னணி தனியான அணியாக நாடாளுமன்றத்தில் இயங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.