நாடாளுமன்றில் ஏற்பட்டுள்ள கலகம்
நாடாளுமன்றை உடனடியாக கலைக்குமாறு உறுப்பினர்களின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினரின் கையொப்பத்துடன் பிரேரணையொன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிற...
http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_562.html
கடந்த நாட்களில் நிறைவேற்றப்பட்ட 19வது அரசியலமைப்பு திருத்த சட்ட சரத்தின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ள அவர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி குறித்த பிரேரணைக்கு கையொப்பமிடும் நடவடிக்கை எதிர்வரும் நாட்களில் ஆரம்பிப்பதற்கு குறித்த உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.
குறித்த யோசனைக்கு கையொப்பமிட ஐக்கிய தேசிய கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கு மேலதிகமாக எதிர்கட்சியின் பிரதான பிரிவின் அரசியல் கட்சி சிலவும் இதுவரை ஒத்துழைக்க இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கமைய தற்போதைய நாடாளுமன்றம் 100 நாட்களுக்குள் கலைக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட போதும், 19வது அரசியலமைப்பு மற்றும் 20வது அரசியலமைப்பு ஆகியவற்றை காரணம் காட்டி நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான தினம் குறிக்கப்படாமல் காலம் தாமதமாகும் நிலைமை தோற்றுவிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஆகியன தொடர்ந்தும் ஜனாதிபதியிடம் நாடாளுமன்றை கலைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளன.
இந்நிலையில் நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலொன்றை நடத்துவதற்கு தாம் எவ்வித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை என கடந்த நாளில் ஒன்றிணைந்த எதிர்கட்சியும், சபாநாயகரும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.