கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு நுளம்பு பெருகும் அபாயம்
கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மீண்டும் டெங்கு நுளம்பு பெருகும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதார தரப்பினர் எச்சரிக்கை விடு...


கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மீண்டும் டெங்கு நுளம்பு பெருகும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதார தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த மூன்று தினங்களாக வீடுகளை சோதனைக்குட்படுத்தியபோது இந்த விடயம் தெரியவந்ததாக மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ருவன் விஜயமுனி கூறியுள்ளார்.
கொழும்பு மாநகரின் அநேகமான பகுதிகளில் டெங்கு நுளம்பு பெருகக்கூடிய சாத்தியம் நிலவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய அடுத்த வாரமளவில் டெங்கு நுளம்புகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கலாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நுளம்பு பெருகக்கூடிய வகையில் வீடுகளை வைத்திருந்தவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கும் கொழும்பு மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.