சிஸியின் உச்சகட்ட ஆட்டம் : யூசுப் அல் கர்ழாவிக்கும், முர்ஷிக்கும் மரணதண்டனை !!

இராணுவச் சதிப்புரசிட்யை மேற்கொண்ட சிஸியின் பிடியில் இருக்கும் எகிப்த்தில் அதன் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் முர்ஷி மீதான மரண தண்டனையை அந்நாட்...

இராணுவச் சதிப்புரசிட்யை மேற்கொண்ட சிஸியின் பிடியில் இருக்கும் எகிப்த்தில் அதன் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் முர்ஷி மீதான மரண தண்டனையை அந்நாட்டு ”நீதிமன்றம்’ உறுதி செய்துள்ளதோடு மற்றொரு வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது

அதேவேளை இந்த வழக்கில் முன்னணி சர்வதேச இஸ்லாமிய அறிஞரான யூசுப் அல் கர்ழாவிக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

இவர்கள் மீதான அரசியல் நோக்கம் கொண்டு சோடிக்கப்பட்ட குற்றசாட்டுகளான 2011 ஆம் ஆண்டு சிறையுடைப்பு மற்றும் பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய ”குற்றச்சாட்டில்” கடந்த மே மாதம் வழங்கப்பட்ட மரணதண்டனையையே கெய்ரோ ”நீதிமன்றம்” நேற்று உறுதி செய்துள்ளது . இதன்போது முர்சியோடு மேலும் 100க்கும் அதிக மாக பிரதிவாதிகளுக்கு ”நீதிமன்றம்” ( சிஸி மன்றம் ) மரண தண் டனை விதித்திருந்தது.

முன்னதாக முர்சி மீதான மரணதண்டனை தீர்ப்பு எகிப்தின் உயர்மட்ட மார்க்க அதிகார தலைமை முப்தியின் ஆலோசனைக்கு விடப்பட்டிருந்தது. தலைமை முப்தியின் ஆலோசனையை ஏற்கவேண்டிய கடப் பாடு எகிப்து ”நீதித்துறைக்கு” இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தவிர, அரசியல் நோக்கம் கொண்டு சோடிக்கப்பட்ட மேலும் குற்றச்சாட்டுகளான பலஸ்தீன இஸ்லாமிய அமைப்பான ஹமாஸ், லெபனானின் ஹிஸ்புல்லாஹ் மற்றும் ஈரானுக் காக உளவுபார்த்த குற்றத்திற்காக முர்சிக்கு நேற்று ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது

இந்த குற்றச்சாட்டுகள் ‘அபத்தமானது’ என்று அவரது ஆதரவாளர்கள் விபரித்துள்ளனர். எனினும் இந்த தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கில் முன்னணி இஸ்லாமிய அறிஞரான யூசுப் அல் கர்ழாவிக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. எகிப்தில் பிறந்த யூசுப் அல் கர்ழாவி தற்போது கட்டாரில் வாழந்து வருகிறார். அவர் இந்த வழக்கில் ஆஜரா கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2011 ஆம் ஆண்டு மக்கள் எழுச்சி போராட்டத்தின் மூலம் எகிப்தில் சர்வாதிகாரி ஹசனி முபாரக்கின் 30 ஆண்டு ஆட்சி முடிவுக்கு வந்ததோடு ஓர் ஆண்டு கழித்து முர்ஸி அந்நாட்டில் ஜனநாயக முறை யில் தேர்வான முதல் ஜனாதிபதியாக பதவி ஏற்றார். எனினும் 2013 ஜூலை நன்கு திட்டமிடப்பட்ட இராணுவ சதிப்புரட்சி மூலம் முர்சி பதவி கவிழ்க்கப்பட்டார்.

இந்நிலையில் ஆர்ப்பாட்டக்கார்களை துன்புறுத்திய தாகவும் கைது செய்ததாகவும் குற்றம் காணப்பட்ட முர்சி ஏற்கனவே 20 ஆண்டு சிறை அனுபவித்து வருகிறார்.

குற்றச்சாட்டு குறித்து நேற்று ”தீர்ப்பு” அளித்த ”நீதிபதி”, முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு பலஸ்தீன ஹமாஸ் அமைப்புடன் கூட்டுச் சேர்ந்து எகிப்தின் கிழக்கு எல்லைகளில் ஊடுருவியதாகவும் சிறையை தாக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதில் 2005 மற்றும் 2013 காலப்பகுதிகளில் எகிப் தின் இரகசிய ஆவணங்களை வெளிநாடுகளுக்கு வழங்கியதாக அறுபது முஸ்லிம் சகோதரத்துவ உறுப்பினர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட் டது. இதில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் முன்னணி தலைவர் கைரத் அல் பதிர் மற்றும் மூன்று பிரதிவாதிகள் தடுப்புக்காவலில் உள்ளனர். இதே குற்றச்சாட்டில் சகோதரத்துவ அமைப்பின் உயர்மட்ட தலைவர் முஹமது பதிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

“இந்த தீர்ப்பு மூலம் எகிப்தின் ஜனநாயக சவப்பெட்டியின் கடைசி ஆணியும் அறையப்பட்டு விட்டது” என்று முர்சி அமைச்சரவையில் இருந்த யஹ்யா ஹமீத் ஸ்தன்பூலில் வைத்து குறிப்பிட்டார்.

MB 2”நீதிமன்ற தீர்ப்பு” வாசிக்கப்படும்போது நீலநிற கைதி உடையில் குற்றவாளிக் கூண்டில் ஆஜராகி இருந்த முர்சி, அமைதியாக புன்னகைத்தபடி காணப் பட்டார். எனினும் ஏனைய பிரதிவாதிகள், “இராணுவ ஆட்சி ஒழிய” என்று கோஷமெழுப்பினர். முர்ஷி தன் மீது விசாரணை நடத்தும் நீதிமன்றத்தை சட்டத்துக்கு புறம்பானது அங்கீகரிப்பதை மறுத்து வருகிறார்.முர்ஷி பதவி கவிழ்க்கப்பட்டது தொடக்கம் எகிப்தின் இராணுவ ஆதரவு அரசு இஸ்லாமியவாதிகளுக்கு எதிராக கடும் ஒடுக்குமுறையை கையாண்டு வருகிறது.

சர்வதேச கண்டங்கள்

துருக்கி ஜானாதிபதி ரஜப் தய்யுப் அர்தூகான் சட்டம் மற்றும் அடிப்படை உரிமைகள் மீதான படுகொலை “a massacre of law and basic rights” என இந்த ”நீதிமன்ற தீர்ப்புக்களை” வர்ணித்துள்ளார் . எகிப்தின் இராணுவ ஒத்துழைப்பு நாடான அமெரிக்கா முர்சி மீதான மரண தண்டனையை ஆழமான சிக்கல் கொண்டது , அரசியல் நோக்கம் கொண்டது என வர்ணித்துள்ளது , (“deeply troubling” and “politically motivated” ) .
MB

Related

தலைப்பு செய்தி 3770233143832450615

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item