பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றி பெறும்!- எதிர்க்கட்சி நம்பிக்கை
பிரதம மந்திரிக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி பெறும் என்று இலங்கையின் எதிர்க்கட்சி நம்பிக்கை வெளியிட்டுள்ளது. முன்னாள் வெளியுற...

முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இந்தப் பிரேரணையில் 112 பேர் கைச்சாத்திட்டுள்ளனர். மேலும் பலர் கைச்சாத்திடவுள்ளனர்.
இந்தநிலையில் நாடாளுமன்றத்தில் பிரேரணை வெற்றி பெறுமானால் நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டிய நிலை ஏற்படாது எனவும், அமைச்சரவையையே கலைக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
இதன் பின்னர் நாடாளுமன்றத்தில் அதிக பெரும்பான்மையைக் கொண்ட கட்சியின் தலைவரை பிரதமராக நியமிப்பார் என்று பீரிஸ் தெரிவித்துள்ளார்.