பாகிஸ்தானில் நிலவும் கடும் வெப்பத்தினால் 800 இற்கும் அதிகமானவர்கள் உயிரிழப்பு

பாகிஸ்தானின் கராச்சியில் நிலவும் கடும் வெப்பத்தினால் 800 இற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். நாளாந்தம் 2000 இற்கும் அதிகமானவர்கள் வைத...

பாகிஸ்தானில் நிலவும் கடும் வெப்பத்தினால் 800 இற்கும் அதிகமானவர்கள் உயிரிழப்பு
பாகிஸ்தானின் கராச்சியில் நிலவும் கடும் வெப்பத்தினால் 800 இற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

நாளாந்தம் 2000 இற்கும் அதிகமானவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதாக தேசிய அனர்த்த முகாமைத்துவ அதிகார சபை தெரிவித்தது.

கராச்சி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள சிகிச்சை மத்திய நிலையங்களில் பாகிஸ்தான் பொலிஸாரும், உதவிப் படையினரும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வெப்பத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு 77 தொன் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளது.

வெப்பத்தினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை புதைப்பதற்கு போதியளவு வசதிகள் இல்லை என தொண்டர் அமைப்பின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

வயதானவர்களும், வறியவர்களுமே நீரின்றி அதிகம் உயிரிழப்பதாக தேசிய அனர்த்த முகாமைத்துவ அதிகார சபை தெரிவிக்கின்றது.

இதேவேளை, சூழலியல் மாற்றங்களுக்கு அமைய, பாகிஸ்தான் அதிக ஆபத்துள்ள நாடாக மாறிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்காலத்தில் இந்த நிலைமை அதிகரிக்கக் கூடுமென்பதால், அதனை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related

உலகம் 5829096983690815482

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item