பர்மாவில் வாழும் முஸ்லீம்களுக்காக கொழும்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்
பர்மாவில் வாழும் முஸ்லீம்களுக்காக அமைதியான எதிர்ப்பும் கொழும்பில் உள்ள பர்மா நாட்டின் தூதுவரிடமும் பர்மாவில் அப்பாவி முஸ்லீம்களை காட்...

http://kandyskynews.blogspot.com/2015/05/blog-post_879.html

நாளை வெள்ளிக்கிழமை ஜூம்ஆத் தொழுகைக்குப் பின் கொழும்பு 7 தெவட்டஹா பள்ளிவாசல் முன்பாக அமைதியான கண்டனம் தெரிவிப்பததுடன் அறிக்கையையும் கொழும்பில் உள்ள பேர்மா (மியண்மார்) தூதுவரிடமும் சமர்ப்பிக்க உள்ளோம.; என கதிஜா பவுண்டேசனின் தலைவர் முஹம்மத் தெரிவித்தார்.
பர்மாவில் ஆயிரக்கணக்கான குழந்தைகள், வயதாணவர்கள் பெண்கள் என ஈன இரக்கமின்றி கொன்று குவித்து வருகின்றனர். அவர்களது சொத்துக்கள் சூறையாடப்படுகினற்ன. அந் நாட்டில் வாழும் சிறுபாண்மை அப்பாவி முஸ்லீம்களை திட்டமிட்டு கொலை செய்வதுடன் இனச்சுத்திகரிப்பையும் மேற்கொண்டு வரும் அந்த நாட்டு அரசாங்கத்தின் கடும்போக்கு மற்றும் பௌத்த மதத் தலைவர்களினதும் சிநதனையானது இந் உலகில் மிகவும் வெறுக்கத்தக்கச் செயலாகும். இதனையிட்டு ஜ.நா. மணித உரிமை மற்றும் உலக நாடுகள் தலையிட்டு இதனை நிறுத்த வேண்டும் இதற்காக இலங்கை அரசாங்கமும் குரல் கொடுக்க வேண்டும் என முஹம்மத் தெரிவித்தார்.
இம் மக்களுக்காக இறைவனிடம் பிரார்த்தித்து அமைதியாக எவ்வித அசம்பாவிதங்களும் மின்றி நமது எதிர்ப்பை தெரிவிப்போமாக என முஹம்மத் தெரிவித்துள்ளார்.