இலங்கை வித்தியாவுக்கு ஆதரவாக சிங்கள பெண் அமைச்சர்!
புங்குதீவில் வன்புணர்வின் படுகொலை செய்யப்பட்ட வித்தியாவுக்கு, சிறிலங்காவின் பெண் அமைச்சர் ஆதரவும் அனுதாபமும் தெரிவித்துள்ளார். இந்த கொடூ...
http://kandyskynews.blogspot.com/2015/05/blog-post_55.html
புங்குதீவில் வன்புணர்வின் படுகொலை செய்யப்பட்ட வித்தியாவுக்கு, சிறிலங்காவின் பெண் அமைச்சர் ஆதரவும் அனுதாபமும் தெரிவித்துள்ளார்.
இந்த கொடூரமான சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அனைவரும் மெழுகுவர்த்தி ஏற்றி மௌனமாக சோகத்தை வெளிப்படுத்துமாறு சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஸி சேனநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.
இன்று மாலை 5.00 மணிக்கு அமைதியாக சோகத்தை பகிர்ந்து கொள்ள நாட்டிலுள்ள அனைவரையும் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் மெழுகுவர்த்தியுடன் ஒன்றிணையுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொடூரமாக கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவுக்கு ஏற்பட்ட நிலை மீண்டும் இந்த நாட்டில் எந்தவொரு யுவதிக்கும் ஏற்படக்கூடாது.
அப்பாவி மாணவி வித்தியாவுக்கு ஏற்பட்ட விபரீதம் இந்த நாட்டில் யுவதிகளுக்கு ஏற்பட்ட இறுதி நிகழ்வாக இருக்க வேண்டும். இந்த சம்பவத்தைக் கண்டித்து கிளர்ந்தெழுந்து ஆர்ப்பாட்டம் நடத்தியது நியாயமே.
இருந்தாலும் இந்தக் கொடூரத்தை எதிர்த்து யாழ். மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தை இனவாதமாக்கி குறுகிய அரசியல் லாபம் பெற முயற்சிக்கும் சிங்கள அரசியல்வாதிகளின் நடவடிக்கை கண்டிக்கப்பட வேண்டும்.
கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று இடம்பெறும் இந்த அஞ்சலி நிகழ்வில் பிரதி மகளிர் விவகார அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச உட்பட பல அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே ரோஸி சேனநாயக்க இந்த தகவலை வெளியிட்டார்.