முறையான ஆலோசனையின்றி மருந்துகளை விநியோகித்தால் சட்ட நடவடிக்கை
முறையான ஆலோசனையின்றி மருந்துகளை விநியோகிக்கும் மருந்தகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய ஔடதங்கள் அதிகார சபை தெரிவித...
http://kandyskynews.blogspot.com/2015/05/blog-post_34.html
மருந்து வகைகள் விநியோகிக்கப்படும்போது, அவற்றைப் பயன்படுத்த வேண்டிய விதம் குறித்து நோயாளருக்கு மருந்தக உரிமையாளர் அறிவுறுத்தல்களை வழங்குவது கட்டாயமாகும் என அதிகார சபையின் பணிப்பாளர் டொக்டர் அமல் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டார்.
அத்துடன், மருந்தகங்களில் விற்பனை செய்யப்படும் மருந்துகளின் தரம் குறித்தும் தேசிய ஔடதங்கள் அதிகார சபை கவனம் செலுத்தியுள்ளது.
மருந்துச் சீட்டுகளின் பிரகாரம் மருந்து வகைகளை விநியோகிக்கும்போது, அவற்றை உட்கொள்ளும் முறைகள் மற்றும் அளவுகள் குறித்தும் நோயாளர்களுக்கு தெளிவுபடுத்துவது அவசியமாகும் என்றும் அதிகார சபையின் பணிப்பாளர் குறிப்பிட்டார்.