தற்போதைய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற அரசியல் வேட்டை இதுவரை எந்த வரலாற்றில் இடம்பெறவில்லை;விமல்
தற்போதைய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற அரசியல் வேட்டை இதுவரை எந்த வரலாற்றில் இடம்பெறவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெ...

குற்றத் தடுப்பு பிரிவினரால் மூன்றரை மணித்தியாலங்கள் விமல் வீரவன்சவிடம் விசாரணைகள் இடம் பெற்றுள்ளன. இவ்வாறான ஒரு அரசியல் வேட்டையினை நாங்கள் அறிந்த வரலாற்றில் இடம் பெற்றதில்லை என்பது தெளிவான ஒரு விடயமாகும்.இன்று குற்றத் தடுப்பு பிரிவின் பொலிஸார் பாரிய ஒடுக்குமுறையை மேற்கொண்டனர்.
தப்பென்றாலும் சரியென்றாலும் அதிகாரிகள் அவ்வாறான நடவடிக்கை மேற்கொள்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறான ஒரு நிலைமையை மாற்ற வேண்டும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புபட்ட செய்தி – குற்றத் தடுப்பு பிரிவிற்கு சென்றுள்ள விமல்குற்றத் தடுப்பு பிரிவிற்கு சென்றுள்ள விமல்
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தற்போது கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவிற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு விடுத்த அழைப்பு ஒன்றின் அடிப்படையில் விமல் இன்று புதன்கிழமை காலை அங்கு சென்றுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவல்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.வாக்குமூலம் ஒன்று அளிப்பதற்காகவே அவர் அங்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவரது மனைவி சஷி வீரவன்சவின் போலி கடவுச்சீட்டு மற்றும் போலி தேசிய அடையாள அட்டை தயாரிப்பு சம்பவம் குறித்து விமல் வீரவன்சவிடம் விசாரணை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.