25 சிறுமிகளை கற்பழித்த ஆசிரியர்: மரண தண்டனையை நிறைவேற்றிய சீனா
சீனாவில் 26 சிறுமிகளை கற்பழித்த குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சீனாவின் ஹான்சு மாகாணத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணிய...

http://kandyskynews.blogspot.com/2015/05/25_29.html
சீனாவில் 26 சிறுமிகளை கற்பழித்த குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
சீனாவின் ஹான்சு மாகாணத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணியாற்றி வந்தவர் லிஜிஷூன்.இவர் மீது 26 சிறுமிகளிடம் பாலியல் வன்முறை மற்றும் கற்பழிப்பு போன்றவற்றில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
4 வயது முதல் 11 வயது உடைய சிறுமிகளிடம் தவறாக நடந்து கொண்டு உள்ளார். வகுப்பறையில் வைத்தே தனது கற்பழிப்பு சம்பவங்களை நிகழ்த்தி உள்ளார்.
கடந்த 2011 முதல் 2012ம் ஆண்டுகளில் இந்த மோசமான சம்பவங்களை அரங்கேற்றியுள்ளார்.
இதுதொடர்பாக நடைபெற்று வந்த வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அந்த தண்டனையானது நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
சமீபகாலமாக சீனாவில் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை அதிகரித்து உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2012- 2014 ஆம் ஆண்டு மட்டும் 7145 வழக்குகள் பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.