20க்கு அமைச்சரவை அனுமதி : ஹக்கீம் கடும் எதிர்ப்பு
தேர்தல் முறை மாற்றம் தொடர்பான 20வது திருத்தச் சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளபோதும், இந்த திருத்தம் மூலம் சிறு கட்சிகளுக்கு பாதிப...

http://kandyskynews.blogspot.com/2015/05/20_28.html

தேர்தல் முறை மாற்றம் தொடர்பான 20வது திருத்தச் சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளபோதும், இந்த திருத்தம் மூலம் சிறு கட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்
திருத்தங்களுடன் அமைச்சரவையில் சட்டமூலத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஆயினும், ஹக்கீம் அதனை முற்றாக எதிர்த்ததாக கூறப்படுகிறது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமைச்சரவை நேற்று மாலை கூடியது.
அதன்போது ஜனாதிபதி 20 ஆம் திருத்தம் குறித்த அமைச்சரவை பத்திரத்தை சமர்பித்துள்ளார்.
இதன்போது இந்த திருத்தம் மூலம் சிறு கட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
யோசனைக்கு அனுமதி அளிக்குமாறும் பிரச்சினைகளை பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்றும் ஜனாதிபதி இதன்போது கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.(ரி)