புங்குடுதீவு மாணவி கொலை: நீதிமன்ற வளாகம் முன் எதிர்ப்பில் ஈடுபட்ட 127 பேர் கைது
புங்குடுதீவு பகுதியில் பாடசாலை மாணவி பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து யாழ். நீதவான் நீதிம...

http://kandyskynews.blogspot.com/2015/05/127.html

யாழ். நீதவான் நீதிமன்ற வளாகத்தில் உயிரிழந்த மாணவிக்கு நீதி வழங்கக் கோரியும் குற்றவாளிகளுக்கு உடனடித் தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, இடம்பெற்ற கலவரம் காரணமாக பொலிஸார் இன்று பிற்பகல் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டிருந்தனர்.
கலவரத்தை கட்டிற்குள் கொண்டுவரும் பொருட்டு குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எதிர்ப்பு நடவடிக்கையின்போது ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக காயமடைந்த ஐந்து பொலிஸார் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டது.
கைதானவர்களை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.