பிரபாகரனுடன் இணைந்து மஹிந்த என்னை தோற்கடித்தார் – ரணில்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் இணைந்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தம்மை 2005ம் ஆண்டு ஜனாதிபதி தேர்த...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_960.html
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் இணைந்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தம்மை 2005ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது தோற்கடித்தார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
சுயாதீன தொலைக்காட்சியில் நடைபெற்ற சத்தியாக்கிரகம் என்ற செவ்வி நிகழ்ச்சியில் பங்கேற்ற போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
2005ம் ஆண்டு பிரபாகரனுடன் இணைந்து கொண்ட மஹிந்த அதன் பின்னர் குமரன் பத்மநாதனுடன் இணைந்து கொண்டதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாட்டை பிளவுபடுத்த முயற்சிப்பதாக தமக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவ்வாறு நாட்டை பிளவுபடுத்த நினைத்திருந்தால் ஆட்சி; அதிகாரத்தை தாம் பிரபாகரனுக்கு வழங்கியிருக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
மன்னர் துட்டகமுனுவை லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவிற்கு அழைத்துச் சென்றதனைப் போன்றே சிலர் சத்தமிட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நாட்டில் அரசாட்சி செய்வது நீதியோகும் என்பதனை சிலர் மறந்து விட்டு செயற்படுகின்றார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
ன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு வாக்கு மூலமொன்றை அளிக்குமாறு கோரி லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு அழைப்பு விடுத்திருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிக்கு ஏன் வந்து வாக்கு மூலமொன்றை அளித்திருக்க முடியாது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசாங்கம் 100 நாள் திட்டத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் பலவற்றை நிறைவேற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி சொந்த சொத்து என சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை எனவும், கட்சி தோல்வியடைந்த போது அதனை காத்து வந்ததாகவும், பலர் இணைந்தே தீர்மானங்கள் எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.