ரயில் போக்குவரத்தை நவீனமயப்படுத்த நடவடிக்கை
கடுகதி ரயில் சேவை வலையமைப்பை நவீனமயப்படுத்தும் நோக்கில் உள்நாட்டு போக்குவரத்து அமைச்சு புதிய வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது. இதன்படி...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_917.html
இதன்படி கொழும்பிலிருந்து களனி, அவிஸ்சாவலையின் ஊடாக சப்புகஸ்கந்த நோக்கி செல்லும் ரயில் பாதை மீள புனரமைக்கப்படவுள்ளது.
மேலும் கரையோர பகுதியில் காணப்படும் ரயில் பாதையினை இரட்டை தளங்களாக விரிவாக்கி அமைக்கவும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய அளுத்கமவுக்கான ரயில் தளப்பாதை மற்றும் பொல்கஹவெல, குருநாகலுக்கு இடையிலான ரயில் பாதைகள் விரிவாக்கப்படவுள்ளதுடன்,
அநுராதபுரத்திலிருந்து வவுனியா, மாகோ, திருக்கோணமலை மற்றும் மட்டகளப்பிற்கான ரயில் பாதைகள் புனரமைக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.
குருநாகலிலிருந்து தம்புள்ளையின் ஊடாக ஹபரணைக்கான ரயில் பாதை புதிதாக அமைக்க திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டையிலிருந்து பத்தரமுல்லை ஊடான ரயில் பாதைகளும் புனரமைப்பு செய்யப்படவுள்ளன.
அதுமாத்திரமல்லாது பாணந்துரையிலிருந்து வியாங்கொடவிற்கான மின்சார ரயில் சேவையொன்றினை ஆரம்பிப்பதற்கான அமைச்சரவை பத்திரம் அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்றுகொள்வதற்காக சமர்பிக்கப்பட்டுள்ளது.