சிறிலங்காவில் தொடரும் பாலியல் வன்கொடுமைகள்! ஐ.நா எச்சரிக்கை

சிறிலங்காவில் இடம்பெற்ற பாலியல் வன்கொடுமைகள் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை கோரியுள்ளது. ஐக்கிய நாடுகளின் ச...


சிறிலங்காவில் இடம்பெற்ற பாலியல் வன்கொடுமைகள் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை கோரியுள்ளது.

ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூன் பாதுகாப்பு சபைக்கு அளித்துள்ள அறிக்கையில் இதனை வலியுறுத்தியுள்ளார்.
சிறிலங்காவில் அண்மைக்காலமாக மீள்குடியேற்றம் உட்பட்ட பல்வேறு முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. எனினும் இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட பாலியல் வன்முறை குற்றங்கள் தொடர்பில் அரசாங்கம் உரிய விசாரணைகளை முன்னெடுக்க தவறியுள்ளது.

போரின் பின்னரான காலப்பகுதியில் கடத்தல்கள், தடுத்து வைத்தல், பாலியல் துஷ்பிரயோகம், பாலியல் வன்முறைகள் என்பன அதிகரித்திருந்தன.
இராணுவமயத் திட்டத்தின் கீழ் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது பாலியல் வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டன.
இறுதிப் போர்க் காலப்பகுதியில் தமிழ்ப் பெண்கள் மீது சிறிலங்கா இராணுவத்தினர் பாலியல் வன்முறைகளை மேற்கொண்டனர் என புனர்வாழ்வு அளிக்கப்பட்ட பெண்கள் சாட்சியம் வழங்கியுள்ளனர்.
இனவாத அடிப்படையில் இடம்பெற்ற இந்த வன்முறைகள், விடுதலைப் புலிகளுடன் தொடர்புபட்டவர்கள் என்ற அடிப்படையில் தமிழ் பெண்கள் மீது நிகழ்த்தப்பட்டன.

இந்தநிலையில் சிறிலங்காவில் புதிதாக பதவியேற்றுள்ள அரசாங்கம் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட பாலியல் வன்முறைகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும்.
அத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய மாற்று நடவடிக்கைகளையும் பொருளாதார முன்னேற்றங்களையும், குறிப்பாக போரின் போது கணவர்மாரை இழந்த பெண்களை தலைமையாக கொண்ட குடும்பங்களுக்கும் உதவிகளை வழங்கவேண்டும் என்று பான் கீ மூன் கோரியுள்ளார்.

Related

இலங்கை 326867805264421808

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item