குழந்தையின் கண் இமையில் ராட்சத கட்டி! அரும்பாடுபட்டு காப்பாற்றிய பெற்றோர்
பிரித்தானியாவில் குழந்தை ஒன்றின் கண் இமையில் அரிய வகை கட்டி அகற்றப்பட்ட மகிழ்ச்சியில் பெற்றோர் உள்ளனர். பிரித்தானியாவை சேர்ந்த ஜேமி-எய்மி...

பிரித்தானியாவில் குழந்தை ஒன்றின் கண் இமையில் அரிய வகை கட்டி அகற்றப்பட்ட மகிழ்ச்சியில் பெற்றோர் உள்ளனர்.

ஆனால் பிறக்கும் போதே கோல்பியின் வலது கண் இமையின் மேல் ஒரு சிறிய கட்டி இருந்தது.
இந்த கட்டி ஒரு சில வாரங்களுக்குள் வளர்ந்து ஒரு முட்டையின் அளவிற்கு பெரிதாகிவிட்டது.
இந்த கட்டியை ’ஹெமாங்கியாமோ’(Hemingiyamo) என்று குறிப்பிட்ட மருத்துவர்கள், இதனை அறுவை சிகிச்சை செய்து நீக்கினாலும், கட்டியுள்ள கண்ணின் பார்வை பறிபோய் விடும் என கூறினர்.
அப்போது தங்கள் குழந்தையின் மோசமான நிலைமையை தாங்க முடியாத தம்பதியினர், பிரித்தானியாவின் தேசிய சுகாதார மையத்தில் விண்ணப்பித்து கோல்பியின் அறுவை சிகிச்சைக்காக காத்திருந்தனர்.
ஆனால் அது தாமதமானதால் குழந்தையின் பெற்றோர் மிகவும் வருத்தமடைந்தனர்.
இதற்கிடையே குழந்தையை பரிசோதித்த மருத்துவர் ஒருவர், கட்டியை அகற்ற வேண்டாம் என கிண்டலாக பேசியதை கேட்டு ஜெமி மருத்துவரை அடிக்கவே சென்றுள்ளார்.
இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த லிட்டில் பேபி ஃபேஸ்(Little baby face) என்ற அறக்கட்டளை, கோல்பியின் அறுவை சிகிச்சைக்கன செலவை ஏற்றுக் கொள்ள முன்வந்தது.
இதனையடுத்து தங்களின் வாழ்நாள் சேமிப்பான, 10000 பவுண்டினை வைத்து அமெரிக்கா சென்ற தம்பதியினர், கோல்பியை லியோனக்ஸ் ஹில்(Leonax hill)என்ற மருத்துவமனையில் அனுமதித்தனர்.
கடந்த பிப்ரவரி மாதம் அறக்கட்டளையின் உதவியுடன் நடந்த அறுவை சிகிச்சையில் அந்த கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டு விட்டது.
இதுகுறித்து ஜேமி கூறுகையில், எங்கள் குழந்தை குணமடைந்தது மகிழ்ச்சியை தருகிறது என்றும் வாழ்நாளில் இதை விட மகிழ்ச்சியான தருணம் கிடையாது எனவும் கூறியுள்ளார்.





