இந்த எறும்பு ரோபோக்கள் தான் நாளைய தொழிலாளர்களா?

எறும்பை மாதிரியாகக் கொண்ட ரோபோவை ஜெர்மன் விஞ்ஞானிகள் அறிமுகப்படுத்தியுள்ளனர். ஜெர்மனியின் பிரபல தொழில்நுட்ப நிறுவனமான ஃபெஸ்டோ இதனை வடிவம...

இந்த எறும்பு ரோபோக்கள் தான் நாளைய தொழிலாளர்களா?
எறும்பை மாதிரியாகக் கொண்ட ரோபோவை ஜெர்மன் விஞ்ஞானிகள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

ஜெர்மனியின் பிரபல தொழில்நுட்ப நிறுவனமான ஃபெஸ்டோ இதனை வடிவமைத்துள்ளது.

ஜெர்மனியில் இந்தியப் பிரதமர் மோடி தொடங்கி வைத்த தொழில்நுட்பக் கண்காட்சியில் இந்த ரோபோ பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.

மனிதனின் உள்ளங்கை அளவில் இருக்கும் இந்த ரோபோ, தொழிற்சாலை பயன்பாட்டுக்காக இதுவரை கண்டிபிடிக்கப்பட்ட ரோபோக்களில் மிகச் சிறந்தது.

எறும்பைப் போல தோற்றமளிக்கும் இந்த ரோபோக்களை தொழிற்சாலைகளின் நாளைய தொழிலாளர்கள் என்றால் மிகையாகாது.

ஏனெனில், அதன் கால்கள் மிகவும் நுட்பமாகவும் நேர்த்தியாகவும் பணிகளை செய்து முடிக்கும். அவை 6 தனித்தனி பகுதிகளாக இணைக்கப்பட்டுள்ளன. எனவே, பணியின் தேவைக்கு ஏற்ப ரோபோவால் தன்னை மாற்றிக்கொள்ள முடியும்.

இந்த ரோபோக்கள் கூட்டாக ஒரு பணியில் ஈடுபடும்போது தங்களுக்குள் ஒருங்கிணைப்புடனும், ஒத்துழைப்புடனும் நடந்து கொள்ளும் சிறப்புத் திறனுடையவை.

அதாவது, உணவு சேகரிப்பில் எறும்புகள் எவ்வாறு ஒருங்கிணைந்து செயற்படுகின்றனவோ அது போல ஒன்றுக்கு ஒன்று உதவிக் கொள்ளும்.

இந்த ரோபோக்களில் ஸ்டீரியோ கேமர், ப்ளோர் சென்சார், ரேடியோ மோடுல் உள்ளன.

பல தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது என்பதுடன், மிகக் குறைவான மின்சக்தியில் இயங்கக் கூடியது.
ant
cyberant-600x330
CBZU9AkUUAANRUG
robotants1

Related

உலகம் 5447773443602542280

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item